உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயில்களில், இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே அறிக்கை:தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் இன்று முதல் ஜூன் 18 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் நாளை முதல் ஜூன் 17 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி'- 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மார் 01, 2025 09:30

மதுரை மற்றும் காரைக்குடியிலிருந்து செல்லுகின்ற வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் ஏ சி கார் 3 மற்றும் சதா இருக்காய் 12 பெட்டிகள் உள்ளன. இதில் இரன்டு சதா பெட்டிகளை பதிலாக ஏ சி கார் 5 பெட்டிகளும் சதா ஷேர் பெட்டிகள் 10 வைத்து இயங்கினால் மக்களுக்கு இன்னும் பலன் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும்


முக்கிய வீடியோ