உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்: கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?: இ.பி.எஸ்., கேள்வி

அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்: கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?: இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பழனிசாமி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். தி.மு.க., அரசு இந்த விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தி உள்ளனர்.எக்ஸ் சமூகவலைதளத்தில் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டசபையில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?. பயமா ஸ்டாலின் ?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ., விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

பிரேமலதா ஆதரவு

உண்ணாவிரத போராட்டத்திற்கு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நாளை கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராயம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா?. இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது. கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எங்குமே வேலைவாய்ப்பு இல்லை. அதனால் தான் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 27, 2024 14:25

இரண்டு வருடங்களாக 10 லட்சம் பெற்ற பயனாளிகள் அனைவரும் சேர்ந்து ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா வைத்தால் மட்டுமே வருவார்.


vee srikanth
ஜூன் 27, 2024 12:16

திருட்டுதனமாக விற்கப்படும் கள்ள சாராயம் குடித்து இறந்தால், அரசு இழப்பீடு தரும். அதே போல், திருட்டு மணல் எடுக்கும்போது, அல்லது திருடும்போது, திருடுபவன், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தருமா?


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 11:41

பங்காளி கட்சிகள் சொல்லி வைத்து செயல்படுவது போல அல்லவா தெரிகிறது... நான் அடிப்பது போல நடிக்கிறேன்.... நீ அழுவது போல் நடி !!!!


Venkateswaran Rajaram
ஜூன் 27, 2024 11:22

ஆட்சியில் இருக்கும் பொழுது கொள்ளையடித்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டு தற்பொழுது பொழுதுபோக்கிற்காக மக்கள் பிரச்சனையை பேசுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது கொள்ளையடிப்பதை தவிர... இவர்களை மட்டும் சொல்லவில்லை 90% அரசியல்வாதிகள் இந்த வேலையைத்தான் செய்கின்றனர்... இவர்களுக்கு அரசியல் என்பது ஒரு தொழில்


முருகன்
ஜூன் 27, 2024 11:15

அடுத்த நிகழ்வை நோக்கி சென்றால் உங்கள் கட்சிக்கு நல்லது பத்து வருட உங்கள் கட்சி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பட்டது என்பதே உண்மையாகும்


murali daran
ஜூன் 27, 2024 11:14

இது போதும், தயவு செய்து உங்கள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துங்கள், அரசியல்வாதிகளாகிய நீங்கள் எத்தனை நாட்களுக்கு நமது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க விரும்புகிறீர்கள், அறிவில்லாமல் செத்த குடிகார முட்டாள்களுக்கு. இந்த முட்டாள்தனமான சம்பவத்திற்கு இன்றும் நமது தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த முட்டாள்தனமான சம்பவத்திற்கு மக்களாகிய எங்களுக்கு ஒருபோதும் அனுதாபம் இல்லை. அ.தி.மு.க.வுக்கு ஆளுங்கட்சியுடன் வாதிடுவதற்கு பயனுள்ள தலைப்பு எதுவும் இல்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை