உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை அ.தி.மு.க., ஆய்வுக்கூட்டத்தில் அடிதடி!

மதுரை அ.தி.மு.க., ஆய்வுக்கூட்டத்தில் அடிதடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டத்தில், செல்லுார் ராஜூ கோஷ்டியினரும், டாக்டர் சரவணன் கோஷ்டியினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதே அ.தி.மு.க.,வினர் தயார் ஆகி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம் வருகிறது. கூட்டத்தில் நிர்வாகிகள் வெற்றியை நோக்கி ஓடுமாறு, கட்சி நிர்வாகிகளுக்கு தெம்பூட்டி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4tp735oa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்தவகையில், நவ.,22ம் தேதி திருநெல்வேலி ஜங்ஷனில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு களஆய்வு கூட்டத்தை நடத்தினார். ஆய்வுக்கூட்டத்தில், இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். அடிதடியை கண்டு, ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில், இன்று (நவ.,25) மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேப்டர் ஆப் காமர்ஸ் அரங்கில் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை முன்னிலை நடைபெற்ற இந்த கள ஆய்வு கூட்டத்தில் செல்லுார் ராஜூ கோஷ்டியினரும், டாக்டர் சரவணன் ஆதரவாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். தங்களது கருத்துகளை சொல்ல அனுமதிக்கவில்லை என நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அமைதியாக இருக்கும் படி, மைக்கில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் துளி அளவு கூட மதிக்காமல் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

konanki
நவ 25, 2024 18:51

சபாஷ் தெர்மோ கோல் கொண்டு அடிச்சிகிட்டாங்களா


konanki
நவ 25, 2024 18:50

சொந்த கட்சியிலேயே ஊருக்கு ஊர் அடிதடி. இந்த லட்சணத்தில் இதுங்க வலுவான கூட்டணி அமைக்குமாம். காமெடி பீஸுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 25, 2024 18:31

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதே அ.தி.மு.க.,வினர் தயார் ஆகி வருகின்றனர். கரெக்டு .....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 25, 2024 18:30

வீரமே வாகையே சூஊஊடும் ......


Perumal Pillai
நவ 25, 2024 16:17

செத்து போன ஒரு கட்சிக்கு ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும் ?


Anantharaman Srinivasan
நவ 25, 2024 14:38

இதெல்லாம் ஒண்ணுமே இல்லேங்க.. வரும் நாட்களில் எடப்பாடி தலைபிச்சிண்டு ஒடும் காலம் வரும்.


Venkateswaran Rajaram
நவ 25, 2024 14:18

இரண்டு கேடுகெட்ட திருட்டு ஊழல் கொள்ளை கலகங்களும் வேருடன் களைய வேண்டிய காலத்தீர்க்காக காத்திருக்கும் தமிழக மக்கள்


Rpalnivelu
நவ 25, 2024 14:13

என்ன இது அப்பாவி திமுகவில் எப்பப் பாரு அடிதடி அப்போ பெற மாத்தவேண்டியதுதான். அடிதடி திமுக.


SUBRAMANIAN P
நவ 25, 2024 13:23

இனி எந்த ஜென்மத்துக்கும் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாது.


krishna
நவ 25, 2024 13:22

THAVAZHNDHA PADI NETRU ADMK KATCHIYAI YAARAALUM AZHIKKAVO MUDAKKAVO MUDIYAADHU ENA KOOVINAAR.ADHAAN NEENGA KACHIDHAMAA MGR MAKKAL THILAGATHIN KATCHIYAI SUDUGADU NOKKI EDUTHU SELLUM PODHU MIGA VARUTHAMAAGA ULADHU.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை