உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலப்பட நெய் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு

கலப்பட நெய் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு

மதுரை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கல், ஏ.ஆர்.டெய்ரி புட் என்ற நிறுவனம் சார்பில் ராஜதர்ஷினி தாக்கல் செய்த மனு:நெய், பால் பவுடர், பனீர், மோர் உட்பட பால் சார்ந்த பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க நெய் அனுப்பினோம். எங்கள் நிறுவனம் மட்டுமின்றி, வேறு சில நிறுவனங்களிடமிருந்தும் நெய் வாங்கப்பட்டது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பினார். எங்கள் நிறுவன உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறி, மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரி உத்தரவிட்டார்.நிறுவனத்தில், 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பல விவசாயிகள் பால் வினியோகிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம், நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கும். உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உத்தரவிற்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ''நெய், பால் பவுடர் தவிர பால் சார்ந்த பிற பொருட்களை நிறுவனம் உற்பத்தி செய்ய தடையில்லை. விசாரணை மார்ச், 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ