உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளுக்கான பஸ் பயணம் நடத்துனர்களுக்கு அறிவுரை

குழந்தைகளுக்கான பஸ் பயணம் நடத்துனர்களுக்கு அறிவுரை

சென்னை:'அரசு பஸ்களில், குழந்தைகளுக்கான கட்டணமில்லா பயணம் குறித்து, புகார்களுக்கு இடமளிக்காத வண்ணம் செயல்பட வேண்டும்' என, நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து துறை உத்தரவு:அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ்களில், ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளை கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட 12 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு, அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் ஏற்பட்டால், பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 2020 ஜன., 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு நடப்பாண்டு டிச., 31ம் தேதி வரை பயண கட்டணம் வசூலிக்க தேவையில்லை. இருந்த போதிலும், நடத்துனர்கள் கட்டணம் வசூலிப்பதாகவும், பயணியரிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, நடத்துனர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட வேண்டும்மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி