உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கட்சியுடன் கூட்டணி அ.தி.மு.க., நிர்வாகிகள் விருப்பம்

சீமான் கட்சியுடன் கூட்டணி அ.தி.மு.க., நிர்வாகிகள் விருப்பம்

சென்னை:'சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ம.க., உடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம், அவற்றை களையும் நடவடிக்கைகள் குறித்து, கடந்த 10ம் தேதியில் இருந்து தொகுதி வாரியாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. நேற்று காலையில், அரக்கோணம், தஞ்சாவூர் தொகுதிகள், மாலையில் திருச்சி தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளிடம், சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று பழனிசாமி கேட்டதற்கு, 'நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ம.க., உடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம்' என்று தெரிவித்துள்ளனர். அதற்கு, 'பலமான கூட்டணி அமைப்போம். அனைவரும் உற்சாகமாக பணியாற்றுங்கள்' என, பழனிசாமி உறுதியளித்துள்ளார்.அடுத்து தஞ்சாவூர் நிர்வாகிகள் சிலர், 'சசிகலா, வைத்தியலிங்கம் ஆகியோரை, மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது' என்று கூறியுள்ளனர். அப்போது, 'உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்; சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை' என, பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சிதம்பரம், மதுரை, பெரம்பலுார் தொகுதிகள் கூட்டம், இன்று நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ