மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 29
சென்னை:ஒடிசாவில் 42 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் நிலக்கரி சுரங்கம், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க, இந்தாண்டு துவக்கத்தில் ஏலம் நடத்தியது. அதில், ஒடிசாவில் உள்ள சகிகோபால் நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தில் தமிழக மின் வாரியம் பங்கேற்றது; வேறு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.இதற்கு முன் நடத்திய ஏலத்திலும் மின் வாரியம் தவிர, வேறு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. எனவே, சகிகோபால் சுரங்கம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கம், 2016ல் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன் நான்கில், மூன்று பங்கு இடம் வனத்துறை வசம் இருப்பதால், நிலக்கரி எடுக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்த சுரங்கம் நிலக்கரி அமைச்சகத்திடமே ஒப்படைக்கப்பட்டது.தற்போது, சகிகோபால் சுரங்கம் ஒதுக்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட்டுள்ளது. இந்த சுரங்கம், 42 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இதை, மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் ஆய்வு செய்து, எவ்வளவு நிலக்கரி எடுக்க முடியும்; அதை எடுக்க வேண்டிய வழித்தடத்தை ஆய்வு செய்து தரும். அதற்கேற்ப, சகிகோபால் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் பணி விரைவாக துவங்கும். இவ்வாறு அவர் கூறினார். திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில் மின் வாரியம், 3,300 மெகா வாட் திறனில், மூன்று அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. இவற்றில், சகிகோபால் சுரங்க நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.
1 hour(s) ago | 2
3 hour(s) ago | 29