உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த 50 சதவீத செலவை ஏற்க வேண்டும் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த 50 சதவீத செலவை ஏற்க வேண்டும் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த, 50 சதவீத செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:கர்நாடகாவில் நடந்து வரும் ரயில் பாதை திட்டங்களை விரைவுபடுத்த, அதற்கான செலவில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதனால், கர்நாடகாவில் ரயில் பாதை திட்டப் பணிகள் முன்கூட்டியே முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதைகள் உட்பட 22 திட்டங்கள், 33,467 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரை, 7,154 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 2025 - -26ல் தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு, 1,536 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 8,254 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 2,170 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி தரப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் கூட, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற முடியாது. தமிழக ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிக்க, அதற்கான செலவில் 50 சதவீதத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V SURESH
மார் 09, 2025 21:20

திட்டங்களுக்கு பணம் கொடுக்கச் சொன்னால் கைகளை பின்னால் இழுத்துக் கொள்வோம்.


vbs manian
மார் 09, 2025 12:04

செய்ய மாட்டார்கள். இலவசம் அடி வாங்கும்.


M Ramachandran
மார் 09, 2025 11:48

இந்த கருத்து காங்கரஸ் ஆட்சியின் போதே முன் வைக்க பட்டது அதைய கேரளம் கர்நாடகம் ஆந்திரா போனற மாநிலங்கள் ஏமாற்று பல திட்டஙகள் முடிக்க பட்டன. ஆனால் நம் போதாதா காலம் தமிழ் நாட்டையுய்ய ஆண்டா திராவிட காட்சிகள் ரயில் திட்டமா து எதற்க்கு கமிஸ்ஸின் கிடைக்கா திட்டம் எங்களுக்கு என்று புறம் தள்ளி விட்டன. போதிற்கு விருத்தாசலம் கும்பகோணம் இணைப்பு திட்டத்திற்கு முன்பு கப்பல் மந்தி ரி யாக இருந்த சாராய வியாபாரி எதிர்ப்பு தெரிவித்து கெடுத்தார் ஆப்பை புடுங்கின குரங்கின் கதை.


Kasimani Baskaran
மார் 09, 2025 10:55

ஆங்கிலத்துக்கும் ஹிந்திக்கும் வித்தியாசம் தெரியாத உடன்பிறப்புக்கள் இதற்க்கு எப்படி சம்மதிப்பார்கள் ?


GMM
மார் 09, 2025 09:12

தமிழகம் 50 சதவீதம் செலவு ஏற்க வேண்டாம். நிலமெடுப்பு அதிகவிலை நிர்ணயம் களை எடுத்தால் போதும். 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பட்டா நிலம் ஒருவர் பராமரிப்பில் இருந்தால் மார்க்கெட் விலை. அதன் கீழ் உள்ள நிலத்திற்கு அரசு நிர்ணயிக்கும் கொள் முதல் விலை. / குறைந்த விலை. ரயில் பாதை 1 கி. மீ. சுற்று நிலம் மறு விற்பனை செய்தால், ரயில் நிர்வாகத்திடம் விற்க வேண்டும். அல்லது பணம் செலுத்தி தடையின்மை சான்று பெற வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 07:59

கருத்து நல்ல கருத்து தான். ஆனால் இதற்காக தமிழக அரசு டாஸ்மாக் பார்களை அதிகப்படுத்தி அல்லவா பணம் சேர்க்கும். அதிலும் ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதாச்சாரம் படி மது உற்பத்தியாளர்கள் மதுவை மது பிரியர்களுக்கு கணக்கில் வராமல் விற்பார்கள். இப்படியே இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதீர்கள். இருப்பதை வைத்து மன நிறைவை நாமாகவே தேடிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மது விற்பனை அதிகரிக்க பள்ளியில் கல்லூரிகளில் மாலை உணவு திட்டமாக ஊறுகாயும் குவாட்டரும் சேர்த்து விடுவார்கள். ஆகவே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அமைதியாக இருக்கவும்.


PARTHASARATHI J S
மார் 09, 2025 05:48

அன்புமணியின் இந்த கருத்து சரியானதே. இதன் விளைவுகளை ஐந்தாண்டிற்கு பிறகு ஆய்வோம்.


Appa V
மார் 09, 2025 02:16

ரெயில்வே ஸ்டேஷன்களிலும் பேன்ட்ரி கார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யவும் ரிட்டையரிங் ரூம்களில் மனமகிழ் மன்றங்களும் நடத்த சொன்னால் உடனே நிறைவேற்றுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை