உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையும், சினிமாக்கார பொறுக்கிகளும் தி.மு.க.,வை விமர்சிக்க கூடாது: ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலையும், சினிமாக்கார பொறுக்கிகளும் தி.மு.க.,வை விமர்சிக்க கூடாது: ஆர்.எஸ்.பாரதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி பேசியதாவது: கடந்த 1960களில் ஹிந்தியை விருப்ப மொழியாக வைத்து, ஒரு மொழியில் தோல்வியுற்றால் கூட எல்லா பாடத்தையும் திரும்ப எழுதும் நிலை இருந்தது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் தான், இந்நிலை மாற்றப்பட்டு, இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது.அண்ணாமலை வெள்ளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். கவுண்டர் இனத்தோர், உயர்ஜாதி பிரிவில் இருந்தனர். இட ஒதுக்கீடு மூலம் பலர் உயர்கல்வி பெற்று மருத்துவர், பொறியாளர்கள் ஆனதும், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றுங்கள் என அந்த சமுதாயத்தினர், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டனர்; பின், அதை பெற்றனர். கருணாநிதியால் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டில், இரு மொழிக் கொள்கையில் படித்தவர் அண்ணாமலை. அவரும், சினிமாக்கார பொறுக்கிகளும் தி.மு.க.,வை விமர்சிக்கக்கூடாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு அமர்ந்து கொண்டே, தவறாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கோர வைத்துள்ளார். தற்போது, இரு நாட்கள் லோக்சபாவை, தமிழ் மொழிக்காக தி.மு.க., முடக்கி உள்ளது. உலகில் மிகப்பெரிய பதவியை பெற்ற சுந்தர் பிச்சை கூட, இருமொழிக் கல்வியை கற்றவர் என்பதும், அதை உருவாக்கியது, தி.மு.க., என்பதையும் யாரும் மறுக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலரை மறக்காத பாரதி

தி.மு.க., மாநில அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எங்கு பேசினாலும், 'தினமலர்' நாளிதழை விமர்சித்து பேசுவது வழக்கம். நேற்றும் அவர், ''இங்கு பேசிய சிலர், முதல் நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் என்றனர். அது தவறு. முதன் முதலில் நிதியமைச்சராக இருந்தவர், திராவிட பள்ளியில் படித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதைத்தான், தினமலர் கட்டம் கட்டுவான். இவர்கள் பேசியதற்கு, ஆர்.எஸ்.பாரதியும் தலையாட்டினார் என போடுவான்; அதற்காக சொல்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 175 )

Ramesh Sargam
ஏப் 13, 2025 20:15

ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திமுக பொறுக்கிகள் மற்றவர்களை பற்றி வாயே திறக்கக்கூடாது.


Senthil Kumar
ஏப் 10, 2025 23:08

நன்றாக கதறுங்கள் இனிமேல் தமிழ் நாட்டில் உங்கள் கட்சி ஆட்சிக்கே வராது


Sathyan
ஏப் 10, 2025 12:57

எதற்கு மரியாதை கொடுக்குறீங்க


Krishnamoorthy Perumal
ஏப் 08, 2025 19:02

சினிமா பொறுக்கிகள் என்பதில் உதயநிதியும் அடங்குவாரா?


krishnan
ஏப் 08, 2025 15:19

நம்பர் 1


Mecca Shivan
ஏப் 04, 2025 18:02

என்ன தையிரியம் இருந்த துணையே இப்படி கேவலமா பேசுவீங்க ?


ramu narayanan
ஏப் 02, 2025 15:44

என்ன சார் இது? பொறுக்கிகளை ஆடு கூட சேர்த்து சொல்றீங்க. பொறுக்கிகள் கோவ பட போறாங்க.


Sathyan
ஏப் 10, 2025 12:59

இப்படி பேசற நீயும் ஒரு தீய திமுக ....


Sankare Eswar
ஏப் 02, 2025 12:07

பாரதி பேர எப்படி உங்களுக்கு வைச்சாங்க... உங்களுக்கும் வாய்க்குள்ள நாக்குல மட்டுந்தான் கொழுப்பா... இல்ல... பல்லும் கொழுப்புல இருக்கா...


T.S.Murali
ஏப் 02, 2025 11:38

இவர் ஒரு குப்பை தொட்டி பேசவே அருகதை இல்லாதவர் .


Parthasarathy Badrinarayanan
மார் 29, 2025 05:46

அதை திராவிட ரைடு சைடு பொறுக்கிகள் சொல்லக் கூடாது. Road சைடு பாரதி தரம் கெட்டுப் பேசும் ..........


புதிய வீடியோ