உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு

சென்னை : 'கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலிகளுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தான் காரணம்' என கூறிய, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மீது, மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், 18வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பார்த்திபனிடம், இந்த வழக்கை, நேற்று அண்ணாமலை தாக்கல் செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. அவர், 80 வயதைக் கடந்தவர். 60 ஆண்டு காலம் அரசியலில் இருப்பவர். தி.மு.க.,வின் அழிவுக்காலம் துவங்கி விட்டதால், அவர் என்மீது அவதுாறு பரப்பி உள்ளார். அவர் எனக்கு, 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளேன்.அந்த 1 கோடி ரூபாயில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மையம் ஏற்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளேன். அதற்காக, இந்த வழக்கை கம்பீரத்துடன் நடத்த உள்ளேன். தி.மு.க.,வும், ஆர்.எஸ்.பாரதியும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வின் 'பவர் செக்டார்'

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தொழில் அதிபர் அதானி முதல்வரை சந்தித்தால், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.,வின் 'பவர் சென்டர்' அவரது மருகன் சபரீசன் மற்றும் மகன் உதயநிதி ஆகியோரின் கையில் தான் உள்ளது. அதானி மட்டுமில்ல, யார் வந்தாலும் மருமகனை சந்திக்காமல் எதுவும் நடக்காது என்பது, நேற்று முன்தினம் நடந்த சம்பவம் ஒரு சான்று. முக்கிய சந்திப்புக்கு, தலைமை செயலர், டி.ஜி.பி., என, யாரும் தேவையில்லை. இதைத்தான் சூப்பர் பவர் முதல்வராக சபரீசன் உள்ளார் என சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rpalnivelu
ஜூலை 11, 2024 12:27

மானமே இல்லாதவனிடம் மான நஷ்ட வழக்கு போட்டு என்ன பயன்? அண்ணா உங்களை சுற்றி பலர் கம்பு சுற்றுகிறார்கள். ஆக்ரோஷ முன்னெடுப்பு உங்களை மிக உயரத்துக்கு எடுத்துச் செல்லும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:26

சபரியைத் தட்டித் தூக்காம அப்பப்போ பாஜக கறந்துகிட்டு இருக்கு .......


Barakat Ali
ஜூலை 11, 2024 08:59

ஆர் எஸ் பி மொழியிலேயே பேசினால்தான் அவருக்குப் புரியும் ........


பாமரன்
ஜூலை 11, 2024 08:19

என்னங்க இது வெறும் ஒரு கோடி தானா.... நம்ம மானம் இருக்கா..? மதிப்பு இவ்ளோ தானா..?? . அட்லீஸ்ட் நமக்கு மாசாமாசம் ஏழெட்டு லட்சம் செலவு செஞ்சிக்கிட்டு இருக்கும் தோஸ்துங்க கடனை அடைக்கிற மாதிரி ஒரு அமவுண்டு கேட்டிருக்க வாணாமா...??


enkeyem
ஜூலை 11, 2024 10:58

இந்த ஒரு கோடிக்கே பாரதி திணரப்போவது உறுதி. இதில் அதிக தொகையா? இதே அண்ணாமலை கூறியிருந்தால் இந்த பாரதி பத்து கோடி கேட்டிருப்பான். செந்தில் பாலாஜி வாய்க் கொழுப்பில் அண்ணாமலையிடம் வாட்ச் பில் கேட்டு இப்போது ஓராண்டுக்கு மேல் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறான். இப்போது இந்த பாரதி. கர்மா யாரையும் விடாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ