உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வியில் அதிக மாணவர்களை சேர்த்ததற்கான நல்லாளுமை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டராக ஜெயசீலன் 2023 ஜனவரி முதல் பணியாற்றி வருகிறார். இவர் 2023 கலெக்டர் மாநாட்டில் கல்வியில் சிறப்பாக பணிபுரிந்த கலெக்டருக்கான விருது வழங்கப் பட்டது. சமீபத்தில் 2024 சுதந்திர தின விழா விருதுகள் அறிவிக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம், வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை ஆற்றிய கலெக்டர் என்ற விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியதற்காக நல்லாளுமை விருதும் கலெக்டர் ஜெயசீலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டராக பொறுப்பேற்ற பின் ஜெயசீலன் 2 ஆண்டுக்குள் அடுத்தடுத்து மூன்று விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

thaniya kumar004
ஆக 16, 2024 17:24

விருதுகள் பல வாங்கி என்ன பயன் கிராமப்புறங்களில் இன்றும் சுகாதார சீர்கேடுகளும்,நோய் தொற்றும், சரியான பராமரிப்பு இல்லை. முறையான துப்பரவு பணியாளர்கள் இல்லை. பல முறை மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கிராம சபை கூட்டங்களில் கொடுத்தும் பலன் இல்லை. மாறாக நாங்கள் தலைவரை குறை கூறுவது போல சொல்லி எங்களை புறக்கணிக்க செய்கிறார்கள். திருச்சுழி ஒன்றியம் குலசேகர நல்லூர். 9500203105


sankaranarayanan
ஆக 15, 2024 09:34

விருது நகர் என்ற பெயரிலேயே இருக்குது ஒரு விருது அதை தட்டி பறிக்க நகரில் உள்ள அனைவர்க்குக்கும் பங்கு உண்டு கலெக்ட்டருக்கு கிடைத்தது விருதுநகரில் விருது பெட்ர கலெக்ட்டர் என்றே பெயர் வாழ்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை