உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மீண்டும் தீவிரம் காட்டி வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில், 2021ல், காவல் துறை சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த ராஜேஷ்தாஸ் மீது, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e9e6kl6w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ்தாசுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.

கோரிக்கை

தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் வழக்கு தொடர்ந்தார். அதில், மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.இரு தினங்களுக்கு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல் துறையில் உயர் பதவி வகித்ததால், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, ராஜேஷ்தாஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட நபரும் உயர் அதிகாரி தான் என, நீதிமன்றம் கூறிவிட்டது.

'லுக் அவுட் நோட்டீஸ்'

மேலும் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து ராஜேஷ்தாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உள்ளது. அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.அவர், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாஸ் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
ஏப் 28, 2024 11:23

நடிகவேள் எம் ஆர் ராதாவை சென்ட்ரல் ஜையில் நேரில் சந்திக்க என்றபோது அவர் மிகவும் ஜாலியாக இருந்தார் காரணம் முதல் வகுப்பு சிறையில் இருந்தார் அவர்போல் இவரும் ஜாலியாகத்தான் இருப்பார் அப்போவாவது இரயில் போக்குவரத்து சத்தமா இருக்கும் இப்போது அழகான வசதியான அருமையான எல்லா வசதிகளும் கூடிய வாழ்விடம் ஆகவே ஒரு கவலையும் இருக்காது முக்கிய பிரமுகர்களின் கூடல் விழாக்களும் அவ்வப்போது நடைபெறும் நடை பயிற்சி, ஆரோக்கியமான உணவு , வீட்டு சாப்பாடு , எல்லாமே கிடைக்கும், சிறைச்சாலைகளில் ஒவ்வொரு இலைகளிலும் அதனுள் வாழ்பவர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்றால் youtube இல் சென்று பார்த்தல் ஒவ்வொரு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் நீதி, அநீதி , அங்கு நடக்கும் உண்மை நிலவரங்களை அனுபவித்தவர்கள் கூறுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் ஆகவே சிறை என்பது இன்னமும் உலகத்தை சரியாக புரிந்து கொள்ளாத , காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் வாழவும் தெரியாமல் , தவிக்கும் நடுத்தர குடும்பத்துக்குமட்டுமே தலை குனிவு வந்தே மாதரம்


Natchimuthu Chithiraisamy
ஏப் 27, 2024 11:51

சென்னையில் வீடு மட்டும் 3 ஏக்கர் வீட்டின் மதிப்பே 23௦ கோடி பெனால்டி ஒன்லி 1௦௦௦௦ நீதிபதி வாழ்நாள் சம்பளம் இவருடைய பொழுதுபோக்கு செலவு


மொட்டை தாசன்...
ஏப் 27, 2024 10:55

குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட உடேன கைதுசெய்திருக்கவேண்டும் குற்றவாளிக்கு எல்லாவிதமான சட்ட சலுகைகளும் உள்ளதால் தான் குற்றம் பெருகிக்கொண்டே போகிறது


VENKATASUBRAMANIAN
ஏப் 27, 2024 08:01

சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் இப்படியே மூன்று வருடங்களுக்கு மேல் வழக்கு இருந்தால் குற்றம் குறையாது


Duruvesan
ஏப் 27, 2024 06:45

ஆனாலும் விடியளு ரொம்ப ஸ்ட்ரிட்டு பா


Shanmuganathan CA
ஏப் 27, 2024 06:44

மூன்று வருஷம்தானா ? என்னப்பா சட்டம், என்ன நீதி ?


மேலும் செய்திகள்