உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது எண்ணிக்கை 17 ஆனது: வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது எண்ணிக்கை 17 ஆனது: வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்த நிலையில் வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆகவும் அதிகரித்து உள்ளது.கடந்த 5-ம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள என 16பேர் வரையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என் கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் இவ்வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி மாத்தூரை சேர்ந்த வக்கீல் சிவா என்பவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில்உடன் சிவாதொடர்பில் இருந்து உள்ளதாகவும், இவர் மூலம் கொலையாளிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளளனர். கைது செய்யப்பட்ட சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சிவா வீட்டிலிருந்து ரூ. 9 லட்சம் ரொக்கப்பணத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த வக்கீ்ல்கள் மற்றும் இவரையும் சேர்த்து வக்கீல்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
ஜூலை 26, 2024 10:59

ஏதேது. போற போக்கை பார்த்தா தமிழ்நாட்டு இருக்குற அம்புட்டு பேருக்கும் கொலையில சம்பந்தம் இருக்குன்னு சொல்லுவாங்க போல. தோசை மாவுல தண்ணியை மேல மேல ஊத்தி கரைத்து நீர்த்துப் போகச் செய்து தோசை சுட முடியாம போயிடணும் போல.


இராம தாசன்
ஜூலை 25, 2024 22:53

திரு ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்கள் தன்னை தானே வெட்டி கொண்டு இறந்து விட்டார் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்


gvr
ஜூலை 25, 2024 22:46

Criminal lawyers become lawyer criminals.


UTHAMAN
ஜூலை 25, 2024 22:30

திமுகவினரை காட்டிக்கொடுக்க நினைத்த திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தாயிற்று. இனி ஆளும் கட்சியின் அடிமை ஏவல்துறை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறது. ரிகர்சல் சவுக்குசங்கர்.


அப்புசாமி
ஜூலை 25, 2024 21:01

உடாதீங்க. இன்னும் முப்பது பேரை கைது பண்ணி முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை ரெடி பண்ணி நீதிமன்றத்தை குழப்பி எல்லோரையும் போதிய ஆதாரமில்லைன்னு விடுதலை செஞ்சுருங்க.


RAJ
ஜூலை 25, 2024 20:53

வக்கீல்கள் சட்டத்தை சட்டை பாக்கெட்ல போட்டு வேல பாத்து இருக்காங்க. உங்கள நம்பித்தானே நாடு இருக்கு. வேலியே பயிரை மேயலாமா?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 20:41

குருமா போன்ற சில கைக்கூலிகளைத் தவிர மற்ற பட்டியலின ஆட்கள் இங்கு அரசியல் இயக்கங்களை நடத்த திராவிஷ கட்சிகள் விடாது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ