உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவரை கட்டாயமாக மதம் மாற்றும் முயற்சி; தற்கொலை எண்ணத்தில் தவிப்பு என மனைவி புகார்

கணவரை கட்டாயமாக மதம் மாற்றும் முயற்சி; தற்கொலை எண்ணத்தில் தவிப்பு என மனைவி புகார்

மதுரை: மதுரையில், தன்னையும், கணவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி நடப்பதாகவும், இதனால் கணவர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும், பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.மதுரை, விராட்டிப்பத்து பென்னர் காலனியைச் சேர்ந்தவர் கமலா, 36. இவரது கணவர் அய்யப்பா. கோச்சடையில் இருவரும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகின்றனர். ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது. அய்யப்பாவின் தந்தை நாகலிங்கம். இவர், 2018 முதல் தன்னையும், கணவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சித்து வருவதாகவும், இதன் பின்னணியில் சிலர் துாண்டுதல் இருப்பதாகவும் எஸ்.எஸ்.காலனி போலீசில் கமலா புகார் அளித்துள்ளார்.

எல்லை மீறல்

அதில் தெரிவித்துள்ளதாவது:மதுரை, நடராஜ் நகரில் சர்ச் நடத்தி வரும் கிங்ஸ்டன் பால் என்பவர், மாமனார் நாகலிங்கத்துடன் இணைந்து, எங்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய துாண்டினார். அது நாளுக்குநாள் எல்லை மீறிக்கொண்டே போனது. நாங்கள் வேறு வழியின்றி சகித்துக் கொண்டு வந்தோம்.கடந்தாண்டு ஆகஸ்டில் மாமனாருடன் டி.பி.எம்., நகரைச் சேர்ந்த பாஸ்டர் சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் லிவிங்ஸ்டன், அவரது மனைவி எங்கள் வீட்டிற்கு வந்தனர். எங்களை கிறிஸ்துவ ஆராதனையில் பங்கேற்குமாறும், நாங்கள் சொல்லும் வாசகங்களை சொல்லாவிட்டால், வாழ்வில் மீளமுடியாதபடி சிக்கல், துன்பங்கள் ஏற்படும் எனவும் கட்டாயப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தினர்.பிப்., 20ல் எங்கள் கடை முன்பு மாமனாரும், கிங்ஸ்டன் பாலும் கிறிஸ்துவ மத ஆராதனையும், ஜெபமும் செய்தனர். இதற்கிடையே, என் கணவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை பார்த்தேன்.

சட்ட நடவடிக்கை

அதில், மாமனார், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, எங்களை மதம் மாறுமாறு தொல்லை செய்வதாகவும், அதனால் நான் தற்கொலை செய்யப் போவதாகவும் எழுதியிருந்தார். இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Ganapathy
பிப் 26, 2025 20:40

பாஃஸ்டர் எப்படிசுந்தரமூர்த்தியா இருக்க முடியும்? தாசில்தார் என்னய்யா பண்ணிகிட்டு இருக்காரு? கோட்டா வசதிகளை பெற இப்படி ஒரு சதி. இவன் மூலம் உண்மையான கோட்டா வசதி தேவையுள்ளவன் பாதிக்கப்பட்டுள்ளான் இங்கே.


c.mohanraj raj
பிப் 25, 2025 23:09

இதற்கு நிச்சயமான காரணத்தை சொல்வது என்றால் நீதிமன்றம் தான் நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கும் சலுகையால் அவர்கள் இந்த தவறை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்


சந்திரசேகர்
பிப் 25, 2025 14:11

தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் வெளிநாட்டில் காசை வாங்கி மதம் மாற்ற அதை பயன்படுத்துவார்கள்.ஒருத்தருடைய ஏழ்மை,சாதி மற்றும் நோயை தீர்க்கிறேன் என்கிற பெயரில் மதம் மாற்றுவார்கள்.இவர்கள் சொல்லும் பொய்யை நம்பி மதம் மாறியோர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சுற்றி உள்ளவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.பணத்துக்காக மதம் மாற்றுவது தப்பு.பணத்துக்காக மதம் மாறுவதும் தப்பு.ஒருத்தன் மதம் மாறினால் தான் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என்றால் அவர் கடவுளா ?


Anand
பிப் 25, 2025 13:21

அசச்சுறுத்தும் வகையில் மதம் மாற்றும் முயற்சி செய்கிறார்கள் என்றால் இது பால்டேன் அடிமைகளின் வேலையாக கூட இருக்கலாம்..... அவன் ஏற்கனவே முச்சந்தியில் நின்று தான் மதம் மாறிவிட்டதாக ஊளையிட்டவன்..


ஆரூர் ரங்
பிப் 25, 2025 11:38

யாரால் பிறரின் சிக்கல் துன்பங்களைத் தீர்க்க முடியும்? நிச்சயம் தன் உடலில் அடிக்கப்பட்ட மூன்று ஆணிகளைப் பிடுங்கி எறிந்து விட்டு தப்பத்தெரியாத மனிதரால் அல்ல. அவரே அப்பாவே ஏன் என்னைக் கைவிட்டீர் எனக் கதறி அழுதார்.


Kanns
பிப் 25, 2025 11:17

Remove Citizenship of All Religious Conversion Gangs. Seize All their Assets into Govt for Efficient NonLavish-NonFreeby Nation-People Developments


rasaa
பிப் 25, 2025 10:18

காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. மாறாக உங்கள் மீது வழக்குபோடும். முடிவில் நீங்களும் கணவர் வழியில் செல்வீர்கள்


nisar ahmad
பிப் 25, 2025 10:17

சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும் இது ஏதோ பழிவாங்கல் நடவடிக்கையாக தோன்றுகிறது எங்கு தவறிருந்தாலும் அதற்கான தண்டனை உறுதி செய்ய வேண்டும்.


N.Purushothaman
பிப் 25, 2025 10:14

ஒருவரை மதம் மாற்றும் போது மாற்றம் சேய்ப்பிவருக்கு கணிசமான தொகை கிடைப்பதே இதற்க்கு காரணம் ....இது ஒரு வியாபாரமாகிவிட்டது ....


jayvee
பிப் 25, 2025 10:07

இதுதான் ...சாரம் என்பது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை