நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், அப்பர் கார்குடி பகுதியில், கால்வாயில் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்த குட்டி யானையை, வனதுறையினர் மீட்டு, தாயிடம் சேர்த்து கண்காணித்து வருகின்றனர்முதுமலையில், கால்வாயில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த, குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரகம், அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களான, குட்டி யானை இன்று, தாயுடன் உலா வந்தது. மதியம் 2:30 மணிக்கு, குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தாய் யானை பிளிரியப்படி அதனை மீட்க போராடியது; ஆனால், முடியவில்லை. தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று, தாய் யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து, குட்டி யானை கால்வாயிலிருந்து மீட்டு, தாய் யானையுடன் சேர்த்து, கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பிறந்த ஒரிரு நாட்களான, குட்டி யானை கால்வாயில் விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தொடர்ந்து, தாய் யானையை அங்கிருந்து, விரட்டி, குட்டி யானையை கால்வாயிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயுடன் சேர்க்கப்பட்டு, கண்காணித்து வருகிறோம். குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது' என, கூறினர்.