உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறையாக பதிவு செய்யாத ஆம்னி பஸ்களுக்கு தடை

முறையாக பதிவு செய்யாத ஆம்னி பஸ்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாத, வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் ஆம்னி பஸ்கள் மீது நாளை முதல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்ல, ஆம்னி பஸ்களுக்கு, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு வழங்க, மத்திய மோட்டார் வாகனச் சட்டம் வழி வகுத்துள்ளது. ஆனால், இந்த அனுமதியை பெற்ற சில ஆம்னி பஸ்கள், விதிகளை மீறி இயங்குகின்றன.அதாவது, ஒப்பந்த அடிப்படையில் சுற்றுலாவுக்கு பயணியரை அழைத்துச் செல்லாமல், எஸ்.எம்.எஸ்., இ-டிக்கெட் செயலிகள் வாயிலாக டிக்கெட் வழங்கி, பல இடங்களில் ஏற்றி, இறக்குகின்றனர். ஒரு மாநிலத்தில் பயணியரை ஏற்றி, வெவ்வேறு மாநிலங்களில் பல இடங்களில் இறக்குகின்றனர்.இந்த பஸ்களில் பயணியரின் பெயர் பட்டியல், பயண தேதி, பாதை உள்ளிட்ட விபரங்கள் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பயணியரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது, நாளை முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.வெளிமாநில உரிமம் பெற்றுள்ள, 652 ஆம்னி பஸ்களை, தமிழக பதிவெண் பெறும்படி பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்; மூன்று முறை அவகாசம் அளித்துள்ளோம்; 105 ஆம்னி பஸ்கள் மட்டுமே தமிழக பதிவெண் பெற்றுள்ளன.அதனால், வெளிமாநில பதிவெண் உள்ள ஆம்னி பஸ்களை, பயணியர் புறக்கணிக்க வேண்டும். மீறி பயணிப்போருக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

MASILAMANI
ஜூன் 12, 2024 09:21

அரசு பஸ்களிலேயே எல்லோரும் பயணம் செய்யுங்க. விபத்து நடந்தா, அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டு, அடுத்த நாள் விடியற்காலையில் வீட்டுக் கதவை தட்டி, நஷ்ட ஈடு குடுத்துட்டு போவும்.


veeramani
ஜூன் 12, 2024 09:12

தமிழக ஆரசின் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது தமிழக மக்களின் பணத்தில் நன்கு குளித்துக்கொண்டு உள்ள ஆம்னி பஸ்கள், தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்படுவதில்லை . மாறாக நாகலாந்து, தில்லி, மணிப்பூர் போன்ற இடங்களில் பதிவு செய்துவிட்டு இந்தியா முழுவதும் தௌரிச்ட் ஆகா ஒட்டாமல் பயணிகளை ஏற்றுகிறார்கள். ஒரு வேண்டுகோள். அந்த பேருந்துகளை முதலில் சீஸே செய்யுங்கள் பயனியர்களை இறக்கிவிடுங்கள் மேலும் அனைத்து ஆம்னி பஸ் அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் கொடுத்து தமிழக பதிவு ஏன் கொண்ட பஸ் கலை தமிழ்நாட்டில் இயக்க சொல்லுங்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 12, 2024 08:08

பழியை தூக்கி அடுத்தவர் மீது போடுவது எப்போது தான் நிற்கும் ? ஜப்பார் ற்றவேல்ஸ் பெங்களூரில் ஓடுகிறது ஆனால் சமீர் கானின் பினாமி என்று எல்லாருக்கும் தெரியும் , உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? NL ரெஜிஸ்டெரெட் வண்டிகள் நாகாலாந்திலா ஓடுகிறது , அவர்கள் அப்படி சட்டத்தினை மீறி ஓட்டுவது யார் செய்த தவறினால் ?


VENKATASUBRAMANIAN
ஜூன் 12, 2024 07:57

உங்களால் ஒழுங்காக பஸ் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் ஆம்னி பஸ்ஸை நாடுகிறார்கள். கர்நாடகா போன்ற தரமான வசதிகளுடன் பஸ் கொடுத்தால் தானாகவே வருவார்கள்.


GMM
ஜூன் 12, 2024 07:43

வெளிமாநில ஆம்னி பஸ் தமிழகத்தில் முறையாக பதிவு தேவை என்றால் தமிழக பதிவு செய்த ஆம்னி பஸ்கள் வெளிமாநிலங்களில் பதிவு செய்த விவரம் உண்டா? வெளிமாநில பதிவு எண் ஆம்னியை தமிழக பயணியர் புறக்கணிக்க வேண்டும். இது ஒரு மாநில அரசுக்கு அழகல்ல. துறை கமிஷனர் பிற மாநில அதிகாரியை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அகில இந்திய சுற்றுலா அனுமதி வழங்கிய மத்திய அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க முடியும்.


kannan sundaresan
ஜூன் 12, 2024 07:09

தமிழகத்திலேயே பல ஆம்னி பஸ்கள் பதிவு செய்யப்படாமல் ஓடுகின்றன


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 12, 2024 07:04

ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் வாங்கும் பயணிக்கு பஸ் எந்த மாநில பதிவு எண் பெற்றது என்று எப்படி தெரியும்? அரசுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை