உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு உட்பட பல சங்கங்கள் இணைந்த, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.'வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்; தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்; பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும்; வங்கிகளுக்கு வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை, இவர்கள் பிரதானமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஒரு கட்டமாக, மார்ச் 3ம் தேதி பார்லிமென்ட் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு தழுவிய வங்கிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும், முடிவு செய்துள்ளனர் -- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

kulandai kannan
பிப் 23, 2025 16:01

செக் கலெக்ஷன், டிமாண்ட் டிராஃப்ட், மெயில் டிரான்ஸ்ஃபர், பணம் எடுத்தல் எல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டன. நுகர்வோர் சேவை என்பதே அர்த்தமில்லை.


வங்கிதாஸ்
பிப் 23, 2025 12:51

இருங்க. கொஞ்ச நாளில் செய்ற்கை நுண்பறிவை அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கொணாந்து எறக்கி ஆத்மநிர்பாரை வெச்சு உங்க வேலையெல்லாம்.காலி பண்றோம் பாருங்க. ட்ரம்ப்பையே மிஞ்சுற அளவுக்கு ஆள்குறைப்பு நடக்கப் போகுது


Ramesh Sargam
பிப் 23, 2025 12:50

இந்த வங்கி ஊழியர்கள் வங்கிக்கு வந்தாலே ஒழுங்கா பணிசெய்ய மாட்டார்கள். இதில் strike வேறு.


Barakat Ali
பிப் 23, 2025 12:35

உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆன்லைன் ட்ரேடிங் மோசடிக்கு ஆட்பட்டு பணத்தை இழந்தார் என்று கோவிட் காலகட்டத்தில் இருந்து இப்போதுவரை நான்கைந்து செய்திகளைப் படித்துவிட்டேன் .... மக்களின் வரிப்பணத்தில் மஞ்சக்குளிப்பவர்கள் எப்படியெல்லாம் பணத்தை இழக்கிறார்கள் என்று யோசித்தால் அதிர்ச்சியாக உள்ளது ....


R SRINIVASAN
பிப் 23, 2025 11:32

வங்கி பாஸ்புக் களை வீட்டிலேயே பிரிண்ட் செய்ய வசதி செய்து கொடுத்தால் மிகவும் நல்லாயிருக்கும்.


எவர்கிங்
பிப் 23, 2025 09:48

இந்த சோம்பேறிகள் ஐ வேலை நீக்கம் செய்ய வேண்டும் ATM Online பரிவர்த்தனை, கணினி மயம் வாரத்தில் 5 நாட்கள் வேலை.... இன்னும் என்னத்துக்கு ஊதிய உயர்வு


N Sasikumar Yadhav
பிப் 23, 2025 09:01

வாரத்திற்கு ஐந்து நாட்கள் ரொம்ப ரொம்ப அதிகம். அதனால வாரத்திற்கு ஒரு மணிநேரம் போதுமானது


Kannan Chandran
பிப் 23, 2025 07:22

காங்கிரஸ் செய்த முட்டாள்தனங்களில் இதுவும் ஒன்று..RB1 -யை தவிர அனைத்தையும் மீண்டும் தனியார்மயமாக்குவது காலத்தின் கட்டாயம்


Rajarajan
பிப் 23, 2025 06:20

இன்றைய டிஜிட்டல் உலகில், வங்கிகளுக்கு இவ்வளவு ஊழியர்கள் தேவையே இல்லை. தனியார் வங்கிகள், மிக சரியாக, குறைந்த ஊழியருடன் திட்டமிட்டு வேலை செய்கிறது. ஒரு பொதுத்துறை வங்கி கிளைக்கு, அதிகபட்சம் 5 - 6 ஊழியர் நிர்வாகம் செய்ய போதும். வேலை சுழற்சி அடிப்படையில், சேவிங்ஸ், வரைவோலை, செக் கிளியரன்ஸ், லோன், டெபாசிட் போன்றவற்றை இவர்களே எளிதாக கையாளலாம். இவற்றை ஒப்புதல் செய்ய இவர்களிலேயே இருவரை அனுமதித்தால் போதும். மேற்கொண்டு மேனேஜர் என்ற பதவியே தேவையில்லை. மேலும் சர்வரை டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்துடன் இணைத்துவிட்டால், ரீஜினல் அலுவலகங்கள் தேவையே இல்லை. ரீஜினல் அலுவலகத்திலேயே, மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்தால் போதும். கிளைகளில் அக்கவுண்டில் பணம் செலுத்த / பாஸ் புக் பிரிண்ட் செய்ய மெஷின் , செக் டெபாசிட் பாக்ஸ் ஆகியவை தடையின்றி இருந்தால் போதும். மேலும் வங்கிகளை ஒன்றிணைத்து, ஒரு கிராமத்திற்கு ஒரு வங்கி, டவுனுக்கு இரண்டு, நகரத்திற்கு நான்கு முலைக்கு ஒன்று வீதம், மாநகருக்கு இரண்டு ஏரியாவிற்கு / இரண்டு வார்டுக்கு ஒரு வங்கி இருந்தால் போதும். மீதி அலுவலங்கள் மற்றும் கிளைகளை இழுத்து மூடிவிடலாம்.


N Srinivasan
பிப் 23, 2025 06:07

மார்ச் அல்ல பிப்ரவரி மாதம்


சமீபத்திய செய்தி