உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்

சென்னை:நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சனம் செய்த பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால். இவர் நீதிமன்றங்களுக்கு தொடர் விடுமுறைகள் அளிப்பது குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை, நீதிபதிகளாக இருப்பவர்கள் பணியாற்றும் நேரம் அதிகம். நீதிமன்ற நேரத்துக்கு பின்னும், நீதிமன்றங்களில் இருந்து பணியாற்றுகின்றனர். நிர்வாக பணிகளையும் மேற்கொள்கின்றனர். நீதிமன்ற நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு, அது தெரியும். வார இறுதி நாட்களை, விடுமுறை நாட்களை, தீர்ப்புகள் எழுதுவதற்கு நீதிபதிகள் செலவிடுகின்றனர் என்பது பலருக்கு தெரியாது.சட்ட ஆணையம், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்ற விகிதாசாரத்தை, 1987ல் பரிந்துரைத்திருந்தது. ஆனால், 10 லட்சம் பேருக்கு, 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் தான் உள்ளது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நீதிபதிகளை பற்றியும், நீதித்துறை பற்றியும் பேச, அதிகார அமைப்புக்கு உரிமை இல்லை.வழக்குகள், 5 கோடி நிலுவையில் உள்ளதாக சஞ்சீவ் கூறியுள்ளார். அதில், 73 சதவீதம் அரசு தாக்கல் செய்தது. பொறுப்பற்ற முறையில் நீதித்துறையை விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ