உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றாலத்தில் சீசன் ரம்மியம் மெயின் அருவியில் குளிக்க தடை

குற்றாலத்தில் சீசன் ரம்மியம் மெயின் அருவியில் குளிக்க தடை

தென்காசி: தொடர் மழையால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.மலைப்பகுதியில் அதிகமழைப்பொழிவால் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போலீசார் அபாய ஒலி எழுப்பி குளித்துக் கொண்டிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். மலைப்பகுதிகளில் தொடர் மழையால் ரம்மியமான காற்று வீசியது. வெயில் இன்மையால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி