உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்டரி பஸ்களுக்கு சலுகை தர வேண்டும்!

பேட்டரி பஸ்களுக்கு சலுகை தர வேண்டும்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை போற்றும் வகையில், பேட்டரி பஸ்களை இயக்க வேண்டும் என, மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஒரு பேட்டரி பஸ் விலை, 2 கோடி ரூபாய். டீசலில் ஓடும் பஸ், 40 லட்சம் ரூபாய். எனவே, பேட்டரி பஸ்களை வாங்க, குறைந்த வட்டியில் வங்கி கடன் வசதி, ஜி.எஸ்.டி., வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை, மத்திய அரசு அளிக்க வேண்டும். அதேபோல, தமிழக அரசு பேட்டரி பஸ்களுக்கான, 'சார்ஜிங்' வசதி போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். - டி.ஆர்.தர்மராஜ் செயலர், தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ