| ADDED : ஜூன் 02, 2024 11:21 PM
காரைக்குடி : 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என காரைக்குடியில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: -லோக்சபா தேர்தலில் கருத்துக்கணிப்புகளைத் தாண்டி மக்கள் கணிப்பில் அதிக இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்று இந்தியாவை வல்லரசாக மாற்றுவார். அ.தி.மு.க., குறித்து அண்ணாமலை பேசுவதில் தவறில்லை. பா.ஜ.,-- தி.மு.க., - அ.தி.மு.க., என மூன்று அணிகள் உள்ளன. அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு வங்கி சதவீதம் அனைத்து கட்சிகளுக்கும் மாறுபடும். ஒரு காலத்தில் தி.மு.க., இரண்டு எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே கொண்ட கட்சியாக இருந்தது. பா.ஜ.,வும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான்.தமிழகத்தில் 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் அதிக கட்சிகளை கொண்ட நல்ல கூட்டணி அமையும். கொரோனாவிற்கு பின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், இந்தியா படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 5 ல் இருந்து 3 வது இடத்திற்கு முன்னேற்றம் அடையும் வாய்ப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க., வும் அதன் கூட்டணி கட்சிகளும் செயல்படுகிறது. மக்கள் உண்மை நிலையை அறிந்து தான் ஓட்டளித்துள்ளனர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவோ, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக மக்கள் மீது தேவையற்ற சுமையை தான் ஏற்றி வைத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உறுதியாக உருவாகும்.