உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில கட்சி அந்தஸ்து பா.ம.க.,வுக்கு இல்லை

மாநில கட்சி அந்தஸ்து பா.ம.க.,வுக்கு இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில், 4.32 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ள பா.ம.க.,வால், மாநில கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பா.ஜ., கூட்டணியில் அரக்கோணம், ஆரணி, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், விழுப்புரம் ஆகிய, 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்மபுரி உட்பட அனைத்திலும் தோல்வி அடைந்தது.அதிகபட்சமாக தர்மபுரியில், 4 லட்சத்து, 11,367 ஓட்டுகளைப் பெற்று, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடிததுள்ளது. அரக்கோணம், ஆரணி, கடலுாரில், 2 லட்சத்திற்கும் அதிகமாகவும், ஐந்து தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமாகவும் ஓட்டுகளைப் பெற்று, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.மிக குறைந்த அளவாக கள்ளக்குறிச்சியில் 71,290 ஓட்டுகள் பெற்றது. இங்கு நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து, நான்காவது இடத்திற்கு பா.ம.க., தள்ளப்பட்டுள்ளது. பத்து தொகுதிகளிலும் மொத்தமாக, 18 லட்சத்து 79,686 ஓட்டுகள், அதாவது 4.32 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது.கடந்த, 2009, 2014, 2019 லோக்சபா, 2011, 2016, 2021 சட்டசபை என தொடர் தோல்விகளால், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை, பா.ம.க., இழந்தது. அதை திரும்ப பெற முடியாத நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 06, 2024 13:47

இவர் அடுத்து வர இருக்கும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து சௌமியாவுக்கு ராஜ்ய சபா பதவி வாங்குவார். மறவாமல் பாஜகவை திட்டுவார். எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் சேர்க்காமல் இவரை அரசியலை விட்டு ஒதுக்கி வைத்தால், இவர் சேர்த்த காசை எண்ணிக்கொண்டு தோட்டத்தில் இருக்கலாம்.


தமிழ்
ஜூன் 06, 2024 12:21

அப்போ மாம்பழம் கிடையாதா. இல்லாட்டி என்ன நமக்கு ஸ்வீட் பாக்ஸ் தான் முக்கியம். அது கிடைச்சுடுச்சி இல்ல. அது போதும். மேலதான் நம்ம ஜி இருக்காரே, அவரைக் கேட்டால் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி வாங்கிக்கோடுத்திடாப்போறாரு.


aaruthirumalai
ஜூன் 06, 2024 11:19

கணக்கே புரியல என்ன செய்யிறது.


venugopal s
ஜூன் 06, 2024 10:48

மாம்பழம் தேய்ந்து மாவடு ஆகி விட்டதோ?


Aap ki baar Chocobar
ஜூன் 06, 2024 09:58

அப்போ நமக்கு பால் கட்டியா சாக்கோபார் இல்லையா? மில்கிபாரா?


A Venkatachalam
ஜூன் 06, 2024 09:21

6%


AKS
ஜூன் 06, 2024 09:02

வாய் கொழுப்பால் வீணா போன ஒரு கட்சி பாமக


பாமரன்
ஜூன் 06, 2024 09:00

பாக்ஸ் கிடைச்சது போதாதா...? அடுத்த தபா வரைக்கும் அது நின்னு சொல்லும்...


Jai
ஜூன் 06, 2024 08:51

ஒரு மாநிலத்தில் மட்டுமே உள்ள மாநில கட்சிகளுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது, தங்களுடைய குடும்பம் நலன். மத்தியில் காங்கிரஸை சேர்த்து கொள்ளலாம். பாமக தர்மபுரி தொகுதியை மட்டும் மிக கவனமாக பிரச்சாரம் செய்து சௌமியா அன்புமணியே வெற்றி பெற வைக்க முயற்சி செய்துள்ளனர். தேமுதிக பிரபாகரனை மட்டும் வெற்றி பெற வைக்க பெரும் முயற்சி எடுத்துள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு உண்மையான தலைவர்கள் கிடைக்க குடும்பக் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் இருப்பது தான் பரவாயில்லை.


Sampath Kumar
ஜூன் 06, 2024 08:51

உங்க கட்சி ஏப்போ வெட்டி கட்சி தான் இதுக்கு கட்சியை களைத்து விட்டு வீட்டில் ஒய்வு ஏடுங்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ