உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவதா? திருமாவளவன் கோபம்

தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவதா? திருமாவளவன் கோபம்

சென்னை : “தொகுதி மறுவரையறை பிரச்னையில், மத்திய பா.ஜ., அரசு, தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை குறைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்போம்.லோக்சபா தொகுதி, மறுவரையறை தொடர்பாக முதல்வர் எடுத்துள்ள முயற்சி, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, குழு அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தொகுதி மறுவரையறை நடக்கும்போது, தலித்துகள், முஸ்லிம்களின் ஓட்டை சிதறடிக்காமல், அதற்கான மதிப்பை வழங்க வேண்டும்.இந்த மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தான் நடக்க உள்ளது. இதில், தென் மாநிலங்கள் எப்படி பாதிக்கப்படும் என, அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பா.ஜ.,வினர் கூறுவதுபோல், மறுவரையறை தொடர்பான பிரச்னைகள் எதுவும் கற்பனையான ஒன்று அல்ல; முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னை. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மாநிலங்கள் பாதிக்கப்படும் என, பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.அனைத்தையும் மறைத்துவிட்டு, தி.மு.க.,வை மட்டும் சுட்டிக்காட்டுகிற பா.ஜ.,வின் போக்கை கண்டிக்கிறோம். இதில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

panneer selvam
மார் 11, 2025 17:05

Thiruma ji , being a parliament MP , you should aware that delimitation needs two third parliament members approval . So, as such , there is no chance of doing any work on delimitation . So we can expect that will be kept pending till 1931


अप्पावी
மார் 11, 2025 15:38

அப்போ நிதியமைச்சரை சந்தித்து எதுக்கு விடியலை வெறுப்பேத்தணும்?


ராம் சென்னை
மார் 11, 2025 09:15

இல்லாத ஒரு விஷயத்துக்கு எப்படி முட்டுக் கொடுக்குறாங்க திமுகவும் அவங்களோட கூட்டணி கட்சியும்


Murugesan
மார் 11, 2025 07:55

மனித இனத்தில் பிறந்த மிக மோசமான பிறவி இந்த, ஆள் அயோக்கியர்கள் செய்கிற அயோக்கியதனத்திற்க்கு துணையாக இருக்கிற மட்டமான அடிமை பணம் பதவிக்காக அலைகிற சைத்தான்


ramani
மார் 11, 2025 06:57

பாரேன் எஜமானனை சொன்னவுடன் அடிமைக்கு கோபம் வருவதை


N Sasikumar Yadhav
மார் 11, 2025 06:39

திருட்டு திராவிட மாடலின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளரு திருமாவளுவனாரு சொல்லிட்டார் கேட்டு கொள்ளுங்கள்


Vijay
மார் 11, 2025 06:35

நீ வாங்குற ஒன்னு இரண்டு சீட்டு பிச்சைக்கு இது தேவையா?


சமீபத்திய செய்தி