மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் சின்ன ஓவுலாபுரம் துரைசாமி மகன் சந்திரவேல்முருகன், 46. இவரை சில நாட்களாக காணவில்லை. இதனால் மகன் பிரசாத், 21, ராயப்பன்பட்டி போலீசில் மே 3ல் தன் தந்தையை காணவில்லை என புகார் செய்தார்.இதற்கிடையே சின்ன ஓவுலாபுரத்தில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள எரசக்கநாயக்கனுார் மஞ்சள் நதி கண்மாய் அருகில் தண்ணீர் இல்லாத கிணற்றில், வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் சந்திர வேல்முருகன் கிடந்தார்.உடலை மீட்ட ராயப்பன்பட்டி போலீசார், விசாரணை நடத்தி சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்த சந்திர வேல்முருகனின் உறவினர்கள் நிசாந்த், 26, நித்திஷ், 24, ஆகிய சகோதரர்களை கைது செய்தனர். முன் பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago