உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏற்காட்டில் பஸ் உருண்டு 8 பேர் பலி; 60 பேர் காயம்

ஏற்காட்டில் பஸ் உருண்டு 8 பேர் பலி; 60 பேர் காயம்

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து நேற்று மாலை, 5:30 மணிக்கு, 'முத்து' என்ற தனியார் பஸ், 70 பயணியருடன் புறப்பட்டது.ஏற்காடு, வாழவந்தியை சேர்ந்த டிரைவர் ஜெயரத்தினம் ஓட்டினார். 13வது கொண்டை ஊசி வளைவில் பஸ் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இடது புறம் திரும்பாமல் நேராக சென்று கொண்டை ஊசி வளைவு எதிரே உள்ள தடுப்புச்சுவரை உடைத்து, 100 அடி பள்ளத்தில் உருண்டது. 11வது கொண்டை ஊசி வளைவில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது.இதில், பஸ்சில் பயணித்தவர்கள், அங்கும், இங்குமாக சிதறி விழுந்து படுகாயம் அடைந்தனர். சிலர் ஜன்னல் வழியே, வெளியே துாக்கி வீசப்பட்டனர். பஸ்சில் பயணித்த திருச்செங்கோட்டை சேர்ந்த சிறுவன் முனீஸ்வரன், 10, சேலம், சூரமங்கலம், ஆண்டிப்பட்டி, ஏ.சி.எம்., நகரை சேர்ந்த கார்த்திக், 37, கன்னங்குறிச்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிராம், 57, ஏற்காடு பி.டி.ஓ., அலுவலக ஊழியர் சந்தோஷ், 40, கிச்சிப்பாளையம் மாது, 60, உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட '108' ஆம்புலன்ஸ், ஐந்து தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் மலைப்பாதையில், ஐந்து மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.போலீசார் கூறுகையில், '52 இருக்கைகள் கொண்ட பஸ்சில், 70 பேர் பயணித்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் நின்றபடி பயணித்துள்ளனர். டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. டிரைவர் ஜெயரத்தினம், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி