உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒடிசாவை தமிழன் ஆளலாமா?: அமித்ஷா பேச்சு குறித்து விறுவிறுப்பான விவாதம்

ஒடிசாவை தமிழன் ஆளலாமா?: அமித்ஷா பேச்சு குறித்து விறுவிறுப்பான விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா அல்லது ஒடியா மொழி பேசும் இளைஞர் ஆள வேண்டுமா? பெருமைமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் வழிநடத்தி செல்லலாமா? என தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியிருந்தார்.இந்நிலையில், ஒடிசாவை தமிழன் ஆளலாமா? அமித் ஷா கேள்வி ஆவேசமா மண்ணின் மைந்தர் அரசியலா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=RSckljAzezs


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Pandi Muni
மே 23, 2024 12:40

தமிழகத்தை மாறி மாறி தெலுங்கன் மலையாளி கன்னடன் மீண்டும் தெலுங்கன் என்ன கொடுமை சரவணா இது


Balasubramanian
மே 23, 2024 12:26

வாரணாசியில் மோடி ஜெயித்தார்! வயநாட்டில் ராகுல்! - எதிரிக் கட்சி இதை என்னவென்று விமரிசிக்கும் - சொந்த மாநிலத்தில் பருப்பு வேகவில்லை, இங்கே வந்து போட்டியிடுகிறார் என்று தானே? தமிழரான பாண்டியனுக்கு தன் கட்சியிலும் இடம் கொடுத்து அரசியல் ஆலோசகராக முன் நிறுத்துவது அவரது கட்சியிலேயே பலருக்கு பிடிக்கவில்லை! பாஜக இதை ஆதாயமாக வைத்து அரசியல் செய்கிறது! (வெறும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமே என்றால் இது பெரிய பிரச்சினை ஆகி இருக்காது!) சட்டமன்ற தேர்தலும் உடன் நடப்பதால் இது விவகாரம் ஆகி உள்ளது! நமது அண்ணாமலை நன்கு கன்னடம் தெரிந்தவர் என்றாலும் அவரை கர்னாடக சட்ட மன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினால் எவ்வளவு எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளது என்று எண்ணிப் பாருங்கள்!


Pettai ramasamy
மே 23, 2024 12:14

வெறுப்பு அரசியல் வேண்டாம்


முருகன்
மே 23, 2024 11:40

இங்கிலாந்தை ஒரு இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆளும் போது பாராட்டு. ஒரே நாடு ஒரே தேசத்தில் ஒடிசாவை தமிழன் ஆளு வாதில் என்ன பிரச்சினை


Arjun
மே 23, 2024 11:18

நவீன் பட்நாயக் தமிழராசொல்லவே இல்ல??


ES
மே 23, 2024 12:43

Learn to read properly first


sridhar
மே 23, 2024 10:57

ஏன் கூடாது , தமிழகத்தை தெலுங்கன் ஆளாளாம் என்றால் இதுவும் சரி தான்


venugopal s
மே 23, 2024 10:56

அதை முடிவு செய்ய வேண்டியது ஒரியா மக்கள் தான், எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இல்லை. அதனால் அவர்கள் முடிவுக்கு விட்டு விடுவோமே!


N Sasikumar Yadhav
மே 23, 2024 10:52

தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்யாததால் இப்போது பெரும்பாலான மக்கள் போதையில் மிதக்கிறார்கள் திராவிடன்கள் பணத்தில் மிதக்கிறார்கள் ஒரு மாநிலத்தை அந்தந்த மண்ணை சார்ந்தவர்கள்தான் ஆட்சி செய்தால்தான் அந்தந்த மாநிலம் வளர்ச்சியடையும் . தமிழகம் இப்போது கடன் வாங்குவதில் வளர்ச்சியடைந்திருக்கிறது அப்படி வாங்கிய கடனில் ஆட்டய போடுவதில் திராவிட ஆட்சியாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள்


ஆரூர் ரங்
மே 23, 2024 10:44

நவீன் பட்நாயக்குக்கே நெடுநாளாக ஒடிஷா மொழியில் சரளமாகப் பேச வராதாம். ஆங்கில எழுத்துக்களில் எழுதி வைத்துக் கொண்டு பேசுவார் என்பர் .


Sampath Kumar
மே 23, 2024 11:45

ஆங்கிலத்தில் எழுதி வைத்து பேசுகிறார் அதை நீ பார்த்தியா


ES
மே 23, 2024 12:44

Were is the proof?


A1Suresh
மே 23, 2024 10:38

தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்று இங்கே பேசப்படவில்லையா? ஒரு ஒரிஸ்ஸாகாரன் தமிழகத்தை ஆளவிடுவோமா? அது போலத்தானே ஒரிஸ்ஸாவை ஒரு தமிழன் ஆள்வதும் ? எனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் தக்காளி சட்டினியா


Arjun
மே 23, 2024 11:17

MGR மற்றும் Jayalalitha ஆகியோர் தமிழர் இல்லை சட்டத்தில் இல்லாத ஒன்றை, சீமான் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசலாம்அமித்ஷா போன்ற பெரியவர்கள் பேசுவது அவர்களின் சிறுமையை காட்டுகிறது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி