| ADDED : ஏப் 07, 2024 01:16 AM
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் ராஜேந்திரன் மனைவி காந்திமதி, 56. இவர், மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், நகர செயலருமான தளபதியின் சகோதரி. திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனில் காந்திமதி அளித்த புகார் மனுவில், 'இட பிரச்னையில் தளபதி வீட்டிற்கு பேச சென்ற போது மனைவி வீரலட்சுமி, மகன் அன்பு என்னையும், என் மகளையும் அசிங்கமாக பேசி, முழங்கைக்கு மேல் கடித்து விட்டனர்' என, குறிப்பிட்டிருந்தார். தளபதியின் மனைவி, மகன் மீது தாக்குதல், காயப்படுத்துதல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.தளபதி மனைவி வீரலட்சுமி புகாரில், காந்திமதி, கணவர் ராஜேந்திரன், மகள் அனுப்பிரியா உட்பட ஏழு பேர் மீது மிரட்டல், தாக்குதல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.