உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 3 மாதமாக வழக்குகள் தேக்கம்

ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 3 மாதமாக வழக்குகள் தேக்கம்

சென்னை : ரியல் எஸ்டேட் ஆணையத்தில், தலைவர், உறுப்பினர்கள் இல்லாததால், வழக்குகள் மீதான விசாரணை, மூன்று மாதங்களாக முடங்கியுள்ளன.வீடு, மனை வாங்குவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் அமலாக்கத்துக்காக, தமிழகத்தில், 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.இதன் முதல் தலைவராக, முன்னாள் தலைமை செயலர் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவருடன் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம், கடந்த பிப்ரவரியில் முடிந்தது. இதை கருத்தில் வைத்து, புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டது.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், சட்டத்துறை செயலர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி அடங்கிய இந்த குழு, புதிய தலைவர், உறுப்பினர்கள் தேர்வு பணிகளை மேற்கொண்டது. இந்த கமிட்டி பரிந்துரை அடிப்படையில், புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமன அறிவிப்புகளை வீட்டுவசதி துறை வெளியிட வேண்டும்.கமிட்டி அமைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புதிய தலைவர், உறுப்பினர்கள் தேர்வு முடியவில்லை.இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: வீடு வாங்குவோர் சார்பில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, விசாரணை நடத்த வேண்டிய பிரதான அமர்வில், தலைவர், உறுப்பினர்கள் இல்லை. இவர்களுக்கான நியமன அறிவிப்புகள் வராத நிலையில், வழக்கு விசாரணை பணிகள் முடங்கியுள்ளன. புதிய திட்டங்கள் பதிவு, மேல் முறையீட்டு விசாரணை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த ஆணையம் ஏற்படுத்தும்போது, தலைவர் நியமனம் தாமதமான நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், இங்கு வழக்குகளை விசாரித்து உத்தரவிட்டுள்ளார். புதிய தலைவர் வரும் வரை, இந்த நடைமுறையை தற்போது பின்பற்ற, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி