மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
8 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
8 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
8 hour(s) ago | 1
சென்னை:ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மீது, 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல், பொய் வழக்குப்பதிவு செய்து, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., காதர்பாஷா மற்றும் சிறப்பு எஸ்.ஐ., சுப்புராஜை கைது செய்து, சிறையில் அடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக, காதர் பாஷா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுள்ளது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகள், பொன் மாணிக்கவேல் மீது, 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சில தினங்களுக்கு முன், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். காதர் பாஷா, சுப்புராஜ் வழக்கு தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காதர் பாஷா மீது நடவடிக்கை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளதால், பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரிக்க இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 hour(s) ago | 15
8 hour(s) ago | 3
8 hour(s) ago | 1