உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மக்களை மத்திய அரசு பழி வாங்குகிறது: அதிகாரத்தையும் பறிப்பதாக ஸ்டாலின் ஆவேசம்

பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மக்களை மத்திய அரசு பழி வாங்குகிறது: அதிகாரத்தையும் பறிப்பதாக ஸ்டாலின் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மாநில மக்களை, மத்திய அரசு பழி வாங்குகிறது. மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பட்ஜெட்டில் தமிழகம் அடியோடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதே காரணத்தால், மாநிலங்களுக்கு நிதி வழங்குவது குறித்து நிடி ஆயோக் அமைப்பு நேற்று டில்லியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தை முதல்வர் புறக்கணித்தார்.பிரதமர் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில், மேலும் ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் ஒதுங்கினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்பதையும், டில்லிக்கு போகாமல் தவிர்த்தது ஏன் என்பதையும் மக்களுக்கு விளக்கும் வகையில் ஸ்டாலின் ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். அப்படி புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதமாக மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது.ஒட்டுமொத்த இந்தியர்களுக்காக உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை, 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை பழிவாங்க, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திக் கொண்டார். இந்திய அரசியல் சாசனத்தின் பெயரால் அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது.மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு என அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்பு திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. பத்து ஆண்டுகள் ஆகியும் அது எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.பட்ஜெட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு கூட, தமிழகத்தின் தேவைகளை நினைவூட்டினேன். அதில் ஒன்றை கூட நிதி அமைச்சர் ஏற்கவில்லை. 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இத்தனை ஆண்டுகளாக, சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளை கூறி பட்ஜெட் வாசிப்பார். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து விட்டார் போல.தமிழகம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதி. கொரோனா தொற்று காலத்தில் சென்னைக்கு வந்து அதை துவக்கி வைத்ததே உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.தமிழக அரசுடன் இணைந்து 63,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சரே 2021 பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.எத்தனையோ முறை கேட்டும் பலன் இல்லை. கோவை, மதுரை மாநகரங்களில், மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மூச்சே விடவில்லை. வலியுறுத்தி கேட்டதற்கு, மெட்ரோ ரயில் என்பது மாநில அரசின் திட்டம் என பார்லிமென்டிலேயே பதில் தருகின்றனர்.அப்படி என்றால், இணைந்து செயல்படுத்துவோம் என்ற வாக்கு என்னாயிற்று? மாநில அரசின் திட்டம் என்றால் இனிமேல் ரயில்வேயை மாநிலங்களிடம் ஒப்படைத்து விடுவீர்களா?

அப்பட்டமான பாரபட்சம்

கடந்த ஆண்டு இரண்டு முறை தமிழகத்தை புயல் தாக்கியது. நிதி அமைச்சரே வந்து சேதங்களை பார்வையிட்டார்; உதவி செய்வதாக உறுதி அளித்தார்.ஆனால், 37,000 கோடி கேட்டதற்கு, வெறும் 276 கோடி ரூபாய் தந்து ஏமாற்றி விட்டார். அதே சமயம், தங்கள் பதவி நாற்காலிக்கு கால்களாக முட்டுக் கொடுக்கும் இரண்டு மாநிலங்களுக்கு, 30,000 கோடி ரூபாய்க்கு மேல் அள்ளி வழங்கி இருக்கிறார். இதைக்காட்டிலும் அப்பட்டமான பாரபட்சம் இருக்க முடியாது.தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு பதிலாக, பா.ஜ., அரசு மேலும் மேலும் தவறு செய்கிறது.இதனால், மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள். பார்லிமென்டில் இரு சபைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ., பதில் சொல்லியே தீர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

அதிகாரம் தந்தது யார்?

ஏற்கனவே நடந்து வரும் திட்டங்களுக்கான நிதியை குறைக்கும் வஞ்சக முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையை முடக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளனர்.கேட்டால், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என ஒப்புக்கொண்டால்தான் நிதி தருவார்களாம். மாணவர்களின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போகுமே என்றெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. தங்களின் கொள்கை திணிப்பையும், ஹிந்தி திணிப்பையும் மட்டுமே பா.ஜ., அரசு முன்னிறுத்துகிறது.மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்போம் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி.,யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டுவதற்கான, 20,000 கோடி ரூபாய் இழப்பையே இன்னும் அளிக்காத மத்திய அரசுக்கு, மாநிலங்களின் வரி விதிப்பை மாற்றும் அதிகாரத்தை யார் கொடுத்தது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAAJ68
ஜூலை 28, 2024 19:54

வடசென்னையில் உங்களுக்கு ஓட்டு போடாத மக்களின் வீடுகளுக்கு மின்சார சப்ளை தடை செய்தது யார். உங்க அப்பா காலத்தில் செல்வந்தர்கள் வசிக்கும் செனாய் நகரில் உங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் வீடுகளில் கல் எரிந்ததை மறந்து விட்டீர்களா. திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் மகளிருக்கு தரப்படும் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்று நீங்கள் அதாவது உங்கள் கட்சியினர் மிரட்டவில்லையா.


subramanian
ஜூலை 28, 2024 19:26

ஓங்கோலில் இருந்தால் உடம்பை வருத்தி உழைக்கவேண்டும் , தமிழ் நாட்டில் வாயால் வடைசுடலாம் என்ற ஓடிவந்த வந்தேறி மல்டி ட்ரில்லியன் பல கோடி கோடி லட்சம் சொத்து எப்படி சம்பாதித்தது.? சிதம்பரம் கோயில் தீக்ஷிதர் குடும்பம் பழிவாங்கப்பது உன் ஆட்சியில்தானே.? அரசியல் பழிவாங்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்ததே உன் அப்பன் கருணாநிதிதான்... சட்டசபையில் பாவாடை நாடாவை அவிழ்த்துப்பார் என்று சொன்னவன் கருணாநிதி. மதிப்பிற்குரிய ஐயா காமராஜரை அண்டங்காக்கா , பனையேறி , என்று தரம்கெட்டு பேசியவன் கருணாநிதி. கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்களை பழிவாங்கினார் கருணாநிதி. கர்நாடக அணைகட்ட ஆதரவு கொடுத்து ,காவிரிடெல்டா விவசாயிகளை பழிவாங்கியவர் கருணாநிதி. இன்றும் பல அரசியல் படுகொலைகள் பழிவாங்கதானே நடக்கிறது உன் ஆட்சியில்?


அண்ணாமலை ஜெயராமன்
ஜூலை 28, 2024 16:38

திமுகவை பதவியில் இருந்து இறக்கி விட்டால் தமிழகத்திற்கு அனைத்தும் கிடைக்கும். இவர்கள் புலம்பி நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவார்களே


GMM
ஜூலை 28, 2024 14:31

மக்களின் அடிப்படை பணிகள் பூர்த்தி செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேசம் பாதுகாக்கும் மத்திய அரசுக்கு மட்டும் தான் வரி விதிக்கும், வசூல் செய்யும் அதிகாரம். மாவட்ட, மாநிலங்களுக்கு வரி வசூல் செய்யும் அதிகாரம் சட்டபடி கிடையாது.? மூர்க்க காங்கிரஸ் உருவாக்கிய, நிர்வாகம் புரிய நிதி தேவையை பூர்த்தி செய்ய வழங்கிய நிழல் அதிகார உத்தரவு தான் மாநில வரி வசூல். கூட்டாட்சி என்பது உள்ளாட்சி அமைப்புகள், மாவட்டம் மற்றும் மாநில இணைப்பு, நிதி பகிர்வு. மாநிலத்தை பொறுத்த வரை கவர்னர் தான் முழு அதிகாரம் பெற்றவர். போலி வழக்கறிஞர்கள் தவறான வாதம் இன்னும் பிஜேபிக்கு புரியவில்லை.? மாநில கட்சிகள் மக்கள் மனநிலையை மாற்றி விட்டனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம்.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 11:23

40 ரூபாய் செல்லாத நோட்டை வைத்து எதுவும் வாங்க முடியாது.


PR Makudeswaran
ஜூலை 28, 2024 09:09

மனப் பிராந்தி. புறக்கணிக்கப் படுவோம் என்று உறுதியானால் உச்ச நீதி மன்றம் செல்லலாமே ஏன் பம்மாத்து வேலை தான் தி மு க வின் pazhakkam.


கண்ணன்
ஜூலை 28, 2024 08:05

ஒரு புண்ணாக்கை வைத்துக்கொண்டு நாம் படும் பாடு …..


Dharmavaan
ஜூலை 28, 2024 06:59

பழி வாங்கும் செயலை யார் கண்டிப்பது ஹிந்து விரோத கூட்டம் ரவுடி கூட்டம் மோடி சரியாகத்தான் செயல்படுகிறார்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 28, 2024 05:51

வாயை திறந்தால் பொய் தான்.


Senthoora
ஜூலை 28, 2024 07:38

உண்மையைத்தான் சொல்லுகிறர், ஓட்டுப்போட்டது நீங்கதானே, மக்கள்தான். பட்ஜெட்டில் உங்க தமிழகத்துக்கு என்னது கொடுக்கப்பட்டது என்று பாருங்க,


Mani . V
ஜூலை 28, 2024 05:44

உங்களுக்கு ஓட்டுப்போட்டு தமிழக மக்களை நீங்கள் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு அப்படின்னு சித்திரவதை செய்யுறீங்களே சாப். இதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?


Ravichandran S
ஜூலை 28, 2024 11:29

அனைத்துக்கும் காரணம் மைய அரசு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை