உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வில் சென்டம்: விழுப்புரம் மாணவர் சாதனை

நீட் தேர்வில் சென்டம்: விழுப்புரம் மாணவர் சாதனை

விழுப்புரம்: அகில இந்திய அளவில் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாணவர் சாதனை படைத்துள்ளார்.இந்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதித்தனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் ரஜனீஷ் 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.விழுப்புரம் வழுதரெட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபாகரன், விமலாதேவி தம்பதியின் மகன் ரஜனீஷ். பிரபாகரன், திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர். தாயார் விமலாதேவி விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு கலை கல்லுாரி கணிதத் துறை தலைவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் ரஜனீஷ்.நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து, அங்கேயே நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.மாணவர் ரஜனீஷ் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண் எடுத்தேன். நீட் தேர்வில் 720 மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சி. பெற்றோரின் ஊக்கமும், ஆசிரியர்களின் தொடர் பயிற்சியும் சாதனைக்கு காரணம். சிறு வயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்காக கடுமையான பயிற்சி எடுத்ததால் சாதிக்க முடிந்தது.அகில இந்திய அளவில் முதலிடத்தில் வந்தது மகிழ்ச்சி. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்கவும், கார்டியாலஜி மருத்துவம் படிப்பது எனது விருப்பமாகும். நீட் தேர்வுக்கு படிப்பது எளிதாகவே இருந்தது. தினசரி சொல்லித் தரும் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். தினசரி படிப்பும், அதற்கான டெஸ்ட்டும் எழுதி பார்த்தால் போதுமானது. முழு ஈடுபாட்டுடன் படித்தால் நீட் தேர்வில் எளிதாக வெல்ல முடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jai
ஜூன் 06, 2024 15:45

நீட்டு ரத்தத்தை பற்றி தொடர்ந்து ஆளுங்கட்சி அரசியல் செய்து கொண்டிருந்தாலும் மாணவர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து படித்து இதுபோன்று சாதித்து வருகிறார்கள். வருங்காலத்தில் நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 50 பேர் தமிழ் மாணவர்களாக இருக்க போகிறார்கள். அப்போதும் கூமுட்டைகள் நீட் தேர்வு ரத்து என்று அரசியல் பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள் அது அவர்களின் பிழைப்பு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறந்த மருத்துவர்கள் ஆகி உங்களுக்கு தேவை போக சமுதாயத்திற்கு சிறிய அளவில் தொண்டு செய்யுங்கள்.


Ravi Shankar
ஜூன் 06, 2024 10:50

டெல்லியில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான மார்க் இருந்தாலும், உணவு மற்றும் மொழி பிரச்சனையை சமாளிக்க அருகில் உள்ள ஜிப்மர் கல்லூரியில் படிக்கலாம். வடக்கு தெற்கு மோதல் டெல்லி கல்லூரியில் அதிகம்.


Ravi Shankar
ஜூன் 06, 2024 10:46

உழைப்பே உயர்வு தரும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அதிக பொருள் செலவு செய்து படித்தால் மட்டுமே நீட் சாத்தியம் என்பது மட்டுமே ஒரு உறுத்தலாக விஷயம். நீட்டுக்கு எதிராக போராடுவதை விட்டு, சிலபஸ்ஸை நீட்டுக்கு ஏதவாறு மாற்றி அமைத்து மேல்நிலை படிப்பை நடத்தலாம். கேரளா பள்ளி கல்வி துறை போல.


வாய்மையே வெல்லும்
ஜூன் 06, 2024 10:12

உதயநிதி கொள்ளுப்பேரன் கூட நீட் வேணாம் என்கிற கோணத்தில் வரும் காலங்களில் அரசியல் செய்து பிழைப்பு நடத்துவார், மானங்கெட்ட தமிழர்கள் இவிங்க போடும் பிராடு பேச்சை நம்பி நீட் வேணவே வேணாம் நமக்கு படிப்பு வராது என நம்பி திராவிட பொய்ச்சொல்லுக்கு அடிபணியும்.. வெட்கக்கேடான விஷயம்


Duruvesan
ஜூன் 06, 2024 07:56

விடியல் இனி வரும் எலெக்ஷன் எல்லாம் நீட் ரதுன்னு சொல்லுவாரு


Kavi
ஜூன் 06, 2024 07:18

Excellent and proud


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை