உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேனுக்குள் பெண் போலீசார் தாக்கினர் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கதறல்

வேனுக்குள் பெண் போலீசார் தாக்கினர் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கதறல்

திருச்சி,:பெண் போலீசாரை அவதுாறாக பேசிய வழக்கில் சிக்கியுள்ள, யு டியூபர் 'சவுக்கு' சங்கர், 48, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பெண் போலீசார் தாக்கியதாக புகார் கூறியதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக, 'ரெட்பிக்ஸ்' என்ற யு டியூப் சேனலுக்கு, யு டியூபர் சங்கர், பேட்டியளித்ததாக, அவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.அவர் அளித்த பேட்டியால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக, திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின் என்பவர், 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சங்கர் மீதும், அந்த பேட்டியை பதிவு செய்த ரெட்பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்தனர். பெலிக்ஸ் டில்லியில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சி வழக்கில் ஆஜர்படுத்த, நேற்று காலை, திருச்சி பெண் போலீசார் அடங்கிய குழு மூலம், கோவை மத்திய சிறையில் இருந்து சங்கர், வேனில் அழைத்து வரப்பட்டார். மதியம், 12.30 மணிக்கு மேல், திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயப்ரதா முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, 'வேனில் தன்னை அழைத்து வந்த பெண் போலீசார் என்னை தாக்கினர். உடைந்த கையை முறுக்கினர். அதை வீடியோ எடுத்தனர்' என, புகார் கூறினார். இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனை செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு எவ்வித காயங்களும் இல்லை என சான்றளித்தனர்.இதையடுத்து, மீண்டும் நீதிபதி ஜெயப்ரதா முன் சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திருச்சி போலீசார் தரப்பில், அவரை விசாரிக்க, 7 நாட்கள் கஸ்டடி கேட்டு மனு அளிக்கப்பட்டது. அதற்கு, சங்கரின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, ஒருநாள் நீதிமன்ற காவலில் வைத்து, இன்று, 12.30 மணிக்கு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை சங்கரை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும், நீதிபதி ஜெயப்ரதா உத்தரவிட்டார். அதன்படி, பலத்த பாதுகாப்புடன் அவர், திருச்சி, லால்குடி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அடித்த பெண் போலீசார் பெயர் பதிவு:

நீதிபதியிடம் தன்னை பெண் போலீசார் தாக்கியதாக சங்கர் கூறினார். அப்போது, அவர்களிடம் 'நேம் பேட்ஜ்' இல்லை என்றும் கூறினார். இதையடுத்து நீதிபதி, அவரை தாக்கிய பெண் போலீசாரின் பெயர்களை பதிவு செய்து, அவர்கள் தாக்கியதாக கூறிய புகாரையும் பதிவு செய்தார். பெண் போலீசாரை, அவதுாறாக பேசியதாக யு டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, சென்னை, சேலம், முசிறி, ஊட்டி, நாகப்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை திருச்சி வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.அதற்காக திருச்சி போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில், 10க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கோவை வந்து அவரை வேனில் அழைத்துச் சென்றனர். இதேபோல, சங்கரின் பெண் போலீசாரின் அவதுாறு வீடியோவை வெளியிட்ட, பெலிக்ஸ் ஜெரால்டையும், திருச்சி பெண் போலீசார் குழு சென்னையில் இருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.பெண் போலீசார் குறித்து அவதுாறாக பேசியதால் பெண் போலீசார் அவர்களை அழைத்துச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், பெண் காவலர்களை அவதுாறாக பேசியதாக, சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகளிர் ஆணையத்தில் பெண் போலீசார் புகார் அளித்துள்ளனர். இதுவரை 16 பெண் போலீசார் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் என, 17 பேர், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புதிய வழக்கு

கடந்த, 2023ம் ஆண்டு ஆக., மாதம் 31ம் தேதி, ரெட் பிக்ஸ் யு டியூப் சேனலில் சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதுாறு பரப்பி, இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில், நேதாஜி பேரவையைச் சேர்ந்த வக்கீல் முத்து என்பவர் புகார் அளித்தார்.அந்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஆவேசம்

சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது, 20க்கும் மேற்பட்ட மகளிர், கையில் பதாகைகளுடன், அவரை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், மாலை அவரை லால்குடி சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும், நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த பெண்கள், போலீஸ் வேன் மீது செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MADHAVAN
மே 17, 2024 17:38

இவன் பேசுவது அனைத்தும் பொய் னு இவனே நீதிமன்றத்தில் சொல்லியது தெரியுமா ?


vee srikanth
மே 17, 2024 15:25

ஆண் காவலர் - ஆண் கைதிக்கும், பெண் காவலர் - பெண் கைதிக்கும் கொடுக்கவேண்டும்


கத்தரிக்காய் வியாபாரி
மே 16, 2024 12:18

மாதேஷ் மயிண்ட் வாய்ஸ் தப்பிச்சேன்டா சாமீ


sankaranarayanan
மே 16, 2024 06:15

சவுக்கு சங்கரை லால்குடி சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும், நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த பெண்கள், போலீஸ் வேன் மீது செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இது எப்படி நடை பெற்றது இதற்கு யார் உடந்தை பொறுப்பாளி நீதி மன்றத்திலேயே பெண்கள் போலீசு வேன் மீது செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர் என்பது சரித்திரத்திலேயே இடம்பெறாத நிகழ்ச்சி இதற்கு யாருமே பொறுப்பு ஏற்கமாட்டார்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி