உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது புதிய பாதை பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

4வது புதிய பாதை பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை:சென்னையில், கடற்கரை - எழும்பூர் நான்காவது புதிய பாதை இறுதி கட்ட பணி நடப்பதால், 19 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:  மதுரை - நிஜாமுதீன் சம்பர் கிராந்தி ரயில், நாளை மறுதினம் மாற்றுப் பாதையில் செல்வதால், தாம்பரம், எழும்பூருக்கு செல்லாது; மாறாக, பெரம்பூர் வழியாக செல்லும் மேற்கு வங்கம், லோக்மானிய திலக் - காரைக்கால் ரயில், நாளை மாற்றுப் பாதையில் செல்வதால், எழும்பூர், தாம்பரம் செல்லாது; மாறாக திருத்தணி வழியாக செல்லும் திருச்சி - ஆமதாபாத் சிறப்பு ரயில், நாளை மறுதினம் மாற்றுப் பாதையில் செல்வதால், தாம்பரம், எழும்பூர் செல்லாது; மாறாக திருத்தணி வழியாக செல்லும்.ஒரு பகுதி ரத்து  புதுச்சேரி - எழும்பூர் ரயில், நாளை மறுதினம் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் திருச்செந்துார் - எழும்பூர் ரயில், நாளை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்  திருவண்ணாமலை - தாம்பரம் ரயில், நாளை மறுதினம் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில், மதுரை - எழும்பூர் வைகை ரயில், நாளை மறுதினம் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் திருநெல்வேலி - எழும்பூர் 'வந்தே பாரத்' ரயில், நாளை மறுதினம் மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். புறப்படும் இடமாற்றம் எழும்பூர் - குருவாயூர், எழும்பூர் - மதுரை வைகை ரயில், நாளை மறுதினம் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எழும்பூர் - திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயில், நாளை மறுதினம் மாம்பலத்தில் இருந்து இயக்கப்படும் எழும்பூர் - காரைக்குடி, எழும்பூர் - திருச்செந்துார் ரயில்கள், நாளை மறுதினம் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் ரயில், நாளை மறுதினம் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்  எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில், நாளை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். புறப்படும் நேரம் மாற்றம் எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், நாளை 30 நிமிடங்கள் தாமதமாக, காலை 6:30 மணிக்கு புறப்படும் எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில், நாளை மறுதினம் 30 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6:15 மணிக்கு புறப்படும் எழும்பூர் - புதுச்சேரி ரயில், நாளை மறுதினம் 20 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6:20 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ