மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
54 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கோம்பையில் 20 ஆண்டுகளுக்கு பின், திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் மே 23, 24 நடக்க உள்ளதை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் நடக்கிறது. இதனால் கோம்பை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 பெரிய தேர்களில் இக்கோயில் தேரும் ஒன்று. கோம்பை மட்டுமல்லாது 16 கிராமங்களை சேர்ந்தவர்களும் இணைந்து இக்கோயில் தேரோட்டத்தை நடத்துவது வழக்கம். 2003க்கு பின் 20 ஆண்டுகளாக இங்கு தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு நடத்த கோம்பை அனைத்து சமுதாய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது தேரை பிரித்து பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. தேரோட்டம் மே 12 முதல் ஜூன் 5ம் தேதி வரை 25 நாட்கள் மண்டகப்படி நடைபெறும். மே 22ல் தேர் அடி பெயர்த்தல். தொடர்ந்து 23, 24ல் தேரோட்டம் நடைபெறும்.பொதுவாக தேரோட்டம் முடிந்தவுடன் நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் கோம்பையில் தேர் மே 24ல் நிலைக்கு வந்த பின்னரும், தொடர்ந்து மண்டகப்படி ஜூன் 5 வரை நடைபெறுவது தனிச்சிறப்பு.தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி நேற்று மாலை அரண்மனையில் முகூர்த்த காய் வைத்து வணங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை மலைக் கோயிலில் காலை 11.00 மணிக்கு மேல் கொடி ஏற்றம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடைபெறும். மே 19 ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.இந்த தேரோட்டத்தில் அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், கரியணம்பட்டி, மேலசிந்தலச்சேரி, கீழ சிந்தலச்சேரி, ரெங்கநாதபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களும் மண்டகப்படி நடத்துகின்றனர். கொடி ஏற்றத்திற்கு முன்னதாக ஜமீன் அரண்மனையில் இருந்து செங்கோல் பெற்று வருவது வழக்கம். சுவாமி ரதம் ஏறும் போது செங்கோல் சுவாமியின் கைகளில் இருக்கும்.தேரோட்டம், மண்டகப்படி நிகழ்ச்சிகள் முடிந்து ஜூன் 5ல் சுவாமி மலைக்கோயிலிற்கு செல்லும் போது, செங்கோல் அரண்மனையில் ஒப்படைக்கப்படும்.
54 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago