மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
ஆர்.கே.பேட்டை:பள்ளிப்பட்டில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்ட சென்னை கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த நாதன்குளம் அருகே நள்ளிரவில் வேன் ஓட்டுனரை மடக்கி இளைஞர்கள் இருவர் சமீபத்தில் வழிப்பறியில் ஈடுபட்டனர். பணம் இல்லை என ஓட்டுனர் தெரிவித்ததும், அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். அதை தொடர்ந்து. நேற்று முன்தினம் அத்திமாஞ்சேரிபேட்டையில் இருசக்கர வாகனத்தை திருட முற்பட்டு, பகுதிவாசிகளிடம் சிக்கி தப்பியோடிய கொள்ளையர்கள் இருவர் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த 'சிசிடிவி' காட்சி மற்றும் கொள்ளையர்கள் விட்டு சென்ற மொபைல் போன் ஆகியவற்றை வைத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளை யில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர். இதில், சென்னை பாடியை சேர்ந்த ஜெயராமன் மகன் சஞ்சய், 19, என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றொரு நபரை தேடிவருகின்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது தாங்கள் தான் என சஞ்சய், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
16 hour(s) ago