உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டவில்லை: இபிஎஸ்

சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டவில்லை: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சமூக நீதி என வாய்கிழிய முழங்கிவிட்டு, அதை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்காதது, கண்டனத்துக்கு உரியது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதன் விபரம்:பழனிசாமி: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி சுவரிலும், சமையல் அறை பூட்டிலும், சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற இழி செயல்களை செய்யும் அளவிற்கு, சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது என்றால், இந்த ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம், குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்த இழிசெயல் சிலரால் அரங்கேற்றப்பட்டது. அப்போது, அதற்கான உரிய நீதியை, தி.மு.க., அரசு நிலைநாட்டியிருந்தால், எருமப்பட்டி அம்பேத்கர் நகரிலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. எங்கு மைக் கிடைத்தாலும், 'சமூக நீதி' என வாய்கிழிய முழங்கிவிட்டு, அதை தன் ஆட்சியில் நிலைநாட்ட, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படை கோட்பாட்டை தன் வெற்று விளம்பரத்திற்காக மட்டும், முதல்வர் உதட்டளவில் பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியது.அரசு பள்ளி வளாகத்தில், மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.பன்னீர்செல்வம்: இதுபோன்ற இழி செயல் நடப்பதற்கு காரணம், சமூக விரோதிகள் மீது, மென்மையான போக்கை, தி.மு.க., அரசு கடைப்பிடிப்பதுதான். காவல் துறை மீதான அச்சம் என்பது ஒரு துளி கூட சமூக விரோதிகளுக்கு இல்லை.இச்செயலில் ஈடுபட்டோரை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MADHAVAN
செப் 05, 2024 11:32

மொதல்ல உன்னோட ஜாதிக்காரன் தவிர வேற யாரையாவது கோயம்புதூர் எலக்சன் ல நிக்கவை, பெரிய பருப்பு மாதிரி பேசுற நீ வந்தபிறகுதான் அவனுங்க ஓவரா ஆடுறானுங்க,


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 11:06

அவரு நிலைநாட்டினதெல்லாம் ..... நான் உள்ளதை எழுதினா வெளியிடாது .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 08:28

அதே தான் அந்த பயிறு எழவு சனாதனம் என்றால் என்ன , கடவுள் முன் அனைவரும் சமம்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 11:07

உன் கடவுளா அல்லது என் கடவுளா ???? எந்தக் கடவுள் முன்பு அனைவரும் சமம் ????


Durai Kuppusami
செப் 05, 2024 07:21

இன்னும் அரசியலில் இருக்கியா ..மொத்தமா கட்சியை குழியில் போட்டாச்சி இன்னும் மண்ணு மட்டும் பாக்கி.. தலைவரின்.. அம்மாவின் ஆத்மா உன்ன சும்மா விடாது.. நிச்சயம்


Svs Yaadum oore
செப் 05, 2024 07:10

இவனுக்கு என்ன பெரிய சமூக நீதி ??....அடுத்தவன் பணத்தை சொத்தை பிடிங்கி வெட்கமில்லாமல் தின்பதுதான் இவனுங்க விடியல் சமூக நீதி ??


Duruvesan
செப் 05, 2024 06:25

அட அந்த கருமம் புடிச்ச சமூக நீதின்னா என்ன? திராவிடம் னா என்ன? அது 75 வருசமா ஒதுக்கேடு கொடுத்தும் போகலையா? அய்யனுங்க இனி அரசாங்க உத்தியோகம் வர முடியாது, சரி அவனுங்க சுந்தர் பிச்சை மாதிரி எங்கான போயி பொழச்சிக்கட்டும், மீதி ஆளுங்க திருமா விட்டு யாரும் பெரிய ஆளா வரல ஏன்? சொரியான் ...சொன்ன அந்த கஸ்மால திராவிடம் வர உடல, ஆக இதுக்கு தீர்வு திராவிடம் ஒழியனும்


Kasimani Baskaran
செப் 05, 2024 05:26

தீம்க்காவின் சமூக நீதி சற்று வித்தியாசமானது. ஓட்டு வாங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஓட்டு வாங்கியபின் ஆட்சியை பிடித்து உடன்பிறப்புக்களுக்கு சிறிது அள்ளி வீசிவிட்டு மொத்தத்தையும் அமுக்கவேண்டும். அப்படியே லேபல் ஓட்டுவதையும் விட்டுவிடக்கூடாது. ஆக சமூக நீதி என்பது தியாகம் செய்யக்கூடிய கொள்கைதான். இதை எப்படி பங்காளிகளால் புரிந்துகொள்ள முடியும்.


Mani . V
செப் 05, 2024 04:40

அதுதான் படப்பிடிப்புக்கு குழுவுடன் சென்று அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்களே. அதற்க்கு மேல் என்ன சமூக நீதி வேண்டும்?


rama adhavan
செப் 05, 2024 04:19

திராவிடத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னென்ன? எந்த நூலில் உள்ளன? சொன்னால் படிக்கலாமே?


rama adhavan
செப் 05, 2024 04:16

தெரியாமல்தான் கேட்கிறேன், சமூக நீதி என்றால் என்ன? அதைப்பற்றி திருக்குறள், அல்லது வேறு எந்த பழைய, பண்டைய நூல்களிலாவது உள்ளதா? தெரிவர்கள் சொன்னால் படிக்க மனம் நினைக்கிறது. சமீபத்தில் உள்ள நூல்கள் வேண்டாம். அதில் எதுவும் விளங்காது.


முக்கிய வீடியோ