உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணிடம் சில்மிஷம்; அரசு ஊழியருக்கு கம்பி

பெண்ணிடம் சில்மிஷம்; அரசு ஊழியருக்கு கம்பி

ஈரோடு : சென்னையைச் சேர்ந்த, 37 வயது பெண் தன் கணவருடன் கடந்த, 7ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் பயணித்தார். அதே பெட்டியில் ஊட்டி, அருள் நகரை சேர்ந்த ஜிம்ரிஷ் ராஜ்குமார், 45, வந்தார். கணவனுடன் வந்த பெண் பயணிக்கு, ஜிம்ரிஷ் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.ரயில்வே போலீசார்,ஈரோடு ஸ்டேஷனில் ஜிம்ரிஷ் ராஜ்குமாரை இறக்கி, ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.பாலியல் தொந்தரவு அளித்ததை அவர் ஒப்புக் கொள்ளவே, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவில் அவரை கைது செய்தனர்.ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். கைதான ஜிம்ரிஷ் ராஜ்குமார், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி