உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார்; தங்கம் தென்னரசு பேட்டி

கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார்; தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: இன்று மாலை கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். நிருபர்கள் சந்திப்பில், தங்கம் தென்னரசு கூறியதாவது: இன்று மாலை கவர்னர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கவர்னரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ள உள்ளோம். கவர்னர் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கிறோம். அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு; கவர்னரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் தி.மு.க.,விற்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=89tz9nj8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 15, 2024 21:27

தேநீரிலிருந்து பிறகு விருந்துக்கு அழைப்பு வரும் ஏற்பார்கள் பிறகு கூடி பேச வாய்ப்புகள் கிடைக்கும் பிறகு அஆட்சியில் அங்கம் அல்லது கூட்டு எதோ ஒன்று ஆரம்பம் ஆகும் நல்ல சகுனம்தான் தமிழ் நாட்டிற்கு


God yes Godyes
ஆக 15, 2024 19:17

தேர்தல்களில் தான் கூட்டணி தத்துவம் பொங்கும்.


God yes Godyes
ஆக 15, 2024 19:15

அதென்ன அரசியல் கருத்து.அரசியல் நிலைப் பாடு.இரு வேறுபட்ட இந்த இரண்டையும் ஒனறாக சேர்ப்பவர்கள் யார். அரசியல் கருத்து என்பது தனி மனிதரிடம் உள்ளது.அரசியல் நிலைப்பாடு என்பது பலரது ஒருமித்த கருத்தின் வெளிப்பாடு.இரண்டும் வட தென் துருவங்கள்..


Barakat Ali
ஆக 15, 2024 17:49

இப்படி அப்பப்போ காமெடி பண்ணிக்கிட்டே இருக்கணும் ......


ganapathy
ஆக 15, 2024 15:47

அதாவது கவர்னருகிட்ட இருக்குற அந்த 18 பைலுங்க நியாபகம் இருக்கட்டும்?...ரொம்ப திராவிட பம்மாத்து காட்டாம இப்படித்தான் அடக்கமா இருக்கோணும்


Swaminathan L
ஆக 15, 2024 15:43

திமுக கூட்டணியில் கொள்கை ரீதியாகவே பிளவு உண்டாகி விட்டதோ? காங்கிரஸ் தொடங்கி கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தபின் முதல்வர் பங்கேற்கிறார் என்று அறிவிப்பு.


Barakat Ali
ஆக 15, 2024 17:47

துக்ளக்கார் இருக்கிறாரே ...... அவருக்கு இரு விதமாகவும் புத்தி சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள் .... இரண்டில் எதைப்பின்பற்றலாம் என்று கூற கேடி பிரதர்ஸ் மற்றும் மாப்ளெ இருக்காங்க ....


RAMKUMAR
ஆக 15, 2024 15:33

வைத்தியம் அப்படி .


Jai
ஆக 15, 2024 15:18

கூட்டணி கட்சிகளும் பங்கு ஏற்று இருப்பார்கள் அல்லவா? ஏன் அவர்களை மட்டும் தடுத்து நிறுத்தி விட்டு முதல்வர் மட்டும் கவர்னருடன் தேநீர் விருந்தா?


Ramesh Sargam
ஆக 15, 2024 13:28

நேற்று ஒரு பேச்சு. இன்று ஒரு பேச்சு. டீ குடித்த பிறகு ஒரு பேச்சு. டீயில் சர்க்கரை இல்லை, அது டீ இல்லை, வெறும் வெந்நீர் தண்ணி என்று. கவர்னருக்கு இதெல்லாம் தேவையா??


Ramesh Sargam
ஆக 15, 2024 12:04

நேற்று பங்கேற்கமாட்டோம் என்று உறுதியாக கூறினர். இப்பொழுது பங்கேட்கிறார் என்று கூறுகிறார்கள். இப்படி நேரத்துக்கு நேரம் மனம்மாறுபவர்கள் ஆட்சியில் இருந்தால் அந்த ஆட்சி எப்படி இருக்கும், அவர்கள் ஆளும் மாநிலம் எந்த கதியில் இருக்கும்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை