உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதீத மது போதையால் கல்லுாரி மாணவி பலி

அதீத மது போதையால் கல்லுாரி மாணவி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்போரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினி, 19, இவர், சென்னை படூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஏகாட்டூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gece5get&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 1ம் தேதி, படூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக மாணவியுடன் தங்கினார். மேலும், அவருடன் இரண்டு மாணவியரும் தங்கி இருந்தனர்.அன்று இரவு முழுதும், அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை, 6:00 மணிக்கு, அஸ்வினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துள்ளார்.உடனே, அவரை சக மாணவியர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி இறந்தார்.கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மது போதையில் இறந்தாரா அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தாரா என்பது, பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Mecca Shivan
மார் 05, 2025 07:00

மதுஅருந்திருந்தாரா என்பதை தெளிவாக அறியாமல் ஊடகங்கள் செய்திவெளியூடுவது தவறு ..


Subburamu Krishnasamy
மார் 04, 2025 15:07

Ladies are in no way inferior to gents in liquor consumption. Tamizhagam will become the pioneer in liquor consumption. Congrats to dravidian parties rules.


Nellai tamilan
மார் 04, 2025 13:12

கள்ளசாராயம் குடித்து இறந்தால் தமிழக அப்பா பத்து லட்சம் குடுப்பார் இது நல்ல சாராயம் என்பதால் கிடையாது


pradeep
மார் 04, 2025 13:05

நீங்கள் சொல்வது சரியா


ram
மார் 04, 2025 13:01

எங்கே போனார்கள் இந்த மாதர்குல அமைப்பு பெண்கள் அதுவும் இந்த கனிமொழி விதவைகள் அதிகமாக இருக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது திருமணம் ஆகாமல் போய் சேருகிறது இந்த குடியால். எதிர்க்கட்சி தலைவர் நன்றாக சிலுவம்பாளையத்தில் MIXTURE தின்னு கொண்டு வரும் தேர்தலில் மறுபடியும் நாமே முதல்வர் என்று கனா கண்டுகொண்டிருக்கிறார்.


Muralidharan S
மார் 04, 2025 12:47

அரசாங்கம் ஒருபக்கம் மதுக்கடைகளை தெருவுக்கு தெரு 24 மணி நேரமும் கண்டுகொள்ளாமல் திறந்து வைத்து மக்களை நாசமாக்குகிறது.. மூன்றாம் மொழி வந்தால் மாணவர்கள் வாழ்வு நாசமாகும் என்று சொல்லித்திரியும் பகுத்தறிவு பாசறைகளுக்கு, மதுவினால் குடும்பங்கள் நாசமாவது கண்ணுக்கு தெரியவில்லையா.. .. என்றைக்கு திராவிஷம் தமிழ்நாட்டில் புகுந்ததோ, அன்றிலிருந்து சீரழிவு ஆரம்பம்.. மக்களும் புரிந்து கொள்ளாமல், காசை / இலவசங்களை வாங்கிக்கொண்டு திராவிஷங்களுக்கு ஓட்டுப்போட்டு நாசமாகிக்கொண்டு வருகின்றனர்.


அப்பாவி
மார் 04, 2025 12:43

கள்ளச்சாராயம்னு சொல்லிருங்க. பத்து லட்சம் கிடைக்க வாய்ப்பு.


S. Neelakanta Pillai
மார் 04, 2025 11:16

இளம் பெண்கள் போதைக்கு அடிமை, மா.அரசின் சாராயக் கொள்கையை எதிர்ப்பதை விட்டுவிட்டு ம. அரசின் மும் மொழிக் கொள்கையை எதிர்க்கும் பொறுப்பற்ற குடிமக்கள்


Madras Madra
மார் 04, 2025 10:53

இவர்கள் பெரியாரின் பேத்திகள் தமிழகம் திராவிட கொள்கை யால் இன்னும் இது போன்ற பல முன்னேற்றங்கள் அடைந்து நாசமாக வாழ்த்துக்கள்


Azar Mufeen
மார் 04, 2025 23:57

அய்யா மும்பையில் இதைவிட மோசமா இருக்கிறார்கள் சாவக்கரின் பேத்திகள்


S. Venugopal
மார் 04, 2025 10:42

பல கல்லுரிகளிலும், இன்ஸ்டிடுட்ஸ்களிலும், பல்கலைக் கழகங்களிலும் டெக்னோ கால்சுரல் ஃபங்ஷன்கள் மிகவும் அதிகமான செலவில் அதிக ஆடம்பரத்துடன் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் பொழுதோ மற்றும் நிகழ்ச்சிகள் முடிவு நாட்களிலோ சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்ற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே யூ ஜி சி யோ அல்லது கல்வித்துறையோ இந்த டெக்னோ கல்சுரல் ஃபங்ஷன்களுக்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தினால் நன்று.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 04, 2025 14:01

கல்வி மாநிலப்பட்டியலில் வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நடக்கும் ...


சமீபத்திய செய்தி