உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வானதி மீது நிர்மலாவிடம் புகார்! ஹோட்டல் உரிமையாளரால் கோவையில் கலகலப்பு

வானதி மீது நிர்மலாவிடம் புகார்! ஹோட்டல் உரிமையாளரால் கோவையில் கலகலப்பு

கோவை: நிர்மலாவிடம் வானதி மீது புகார் கூறிய ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கூறிய புகாரால் கலகலப்பு நிலவியது.கோவை கொடிசியா நடைபெற்ற தொழில் துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.அப்போது தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவரும், அன்னபூர்ணா உரிமையாளருமான சீனிவாசன் நிர்மலாவிடம் வானதி மீது புகார் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி, எங்கள் ரெகுலர் கஸ்டமர். அன்னபூர்ணாவுக்கு சாப்பிட வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்.ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி குடிக்கணும், காரம் வேணும் என்பார்.ஜிலேபிக்கு கம்மி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி., என்று சொன்னால் சண்டைக்கு வர்றது, கடை நடத்த முடியல மேடம். ஸ்வீட், காரம் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி போட்டு விடுங்க - தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவரும், அன்னபூர்ணா உரிமையாளருமான சீனிவாசன் புகாரால் கலகலப்பு நிலவியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MURUGANANTHAM KS
செப் 12, 2024 18:30

அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீதே நான் புகார் செய்கின்றேன். என்னவென்றால் வங்கியில் மினிமம் வைக்க இயலாது தொழில் முனைவோர் களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லைனு பைன் போடுவது எந்தவகையில் மனிதாபமிக்க செயலாக இருக்கும். அவனே குறைந்த வைப்புத்தொகைகூட வைக்க முடியாத சூழலில் உள்ளபோது எப்படி அபராத தொகை கட்டச்சொல்வது ஞாயமாகும்...


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:40

வங்கிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க சட்டம் இயற்றி அனுமதி கொடுத்தது ஊழல் புகழ், நோட் அடிக்கும் மெஷினை பாகிஸ்தானுக்கு விற்ற ப சிதம்பரம் என்ற அதிமேதாவி. கேள்வியும் புகாரும் நிர்மலாவிற்கும், வோட்டை ப சிதம்பரம் மகனுக்கு போடும் நீங்கள் கேள்வி கேட்க தகுதி அற்றவர்.


Indian
செப் 12, 2024 16:41

பிஜேபிகாரங்க அடிச்சிக்கிட்டா கலகலப்பு மத்த கட்சிக்காரங்க பேசிகிட்டடா சலசலப்பு. நாரதர் வேலை.


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:41

இந்தியன் முதலில் நீ உன் உண்மையான பெயரில் கருது எழுது, ஏன் வெளில சொல்லமுடியாத அளவிற்கு கேவலமானதா?


புதிய வீடியோ