உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடக்கு, தெற்கு என நாட்டை பிரித்தாள பார்க்கிறது காங்.,: ராஜ்நாத் சிங் ஆவேசம்

வடக்கு, தெற்கு என நாட்டை பிரித்தாள பார்க்கிறது காங்.,: ராஜ்நாத் சிங் ஆவேசம்

திருவண்ணாமலை:''காங்., கூட்டணி கட்சியினர், நாட்டை வடக்கு, தெற்கு என பிரித்து ஆட்சி செய்ய பார்க்கிறார்கள்,'' என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து, திருவண்ணாமலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரித்தார்.காமராஜர் சிலையில் தொடங்கிய ரோடுஷோ, திருவூடல் தெரு, கடலை கடை சந்திப்பு, தேரடி வீதி, காந்தி சிலை வரை சென்றடைந்தது. வழி நெடுகிலும், திரளான பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி, அமைச்சருக்கு ஆரவார எழுச்சி கொடுத்து வரவேற்பளித்தனர். பின், காந்தி சிலை அருகில், திறந்த வேனில் நின்றவாறு, ராஜ்நாத் சிங் பேசியதாவது:காங்., அவர்களது கூட்டணிகள் நாட்டை, வடக்கு, தெற்கு என பிரித்து ஆட்சி செய்ய பார்க்கிறார்கள், ஆனால், பா.ஜ., வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து இந்தியாவிலும், ஒரே கலாசாரம், அரசியல் கோட்பாடு என, அனைவரும் ஒன்றாக இருக்க நினைக்கிறது. பா.ஜ.,வின் நோக்கம் அரசியலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, தேசத்தை கட்டமைப்பது. காங்., - தி.மு.க.,விற்கு குடும்பம்தான் முக்கியம், ஆனால், பா.ஜ.,விற்கு நாடு தான் முக்கியம்.உலக தலைவர்கள் எல்லாம் என்ன கூறுகிறார்கள் என்றால், இந்தியாவின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது. முன்னோக்கித் தான் செல்லும் என கூறுகின்றனர்.கடந்த காலங்களில் இந்தியா எதை கூறினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து, இந்தியா எதை கூறினாலும் அதை கவனிக்க தக்க கருத்தாக கொள்கின்றனர்.ஏனெனில் பிரமர் மோடியின் நோக்கம் என்னவென்று அனைவரும் அறிந்துள்ளனர். அதனால், அவரை பாராட்டுகின்றனர். வரும், 2047 ல், உலக நாடுகளில் இந்தியாதான், அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க போகிறது.காங்கிரசும், தி.மு.க., வும் சேர்ந்து, இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய மாட்டார்கள். தி.மு.க., தன் குடும்ப அரசியலை விட்டுவிடுமா என்றால் இல்லை. காங்., ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்ததா என்றால் இல்லை. தேர்தலுக்கு பிறகு 'இண்டியா' கூட்டணி இருக்குமா என்றால் இல்லை. இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இல்லை.பா.ஜ., கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, பாலராமரை பிரதிஷ்டை செய்தது. இனிமேல் இந்தியாவில் ராமராஜ்ஜியம்தான் அமைக்க போகிறோம். சி.ஏ.ஏ., நடைமுறைப்படுத்தி அனைத்து இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ