உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்மிக சொற்பொழிவில் சர்ச்சை; மாற்றுத்திறனாளிகள் சங்கம் போலீசில் புகார்; தலைமையாசிரியை டிரான்ஸ்பர்

ஆன்மிக சொற்பொழிவில் சர்ச்சை; மாற்றுத்திறனாளிகள் சங்கம் போலீசில் புகார்; தலைமையாசிரியை டிரான்ஸ்பர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த சொற்பொழிவில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

சொற்பொழிவு

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, மாணவ, மாணவிகளிடையே, சொற்பொழிவாற்றினார். அப்போது, மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கச் செய்ததை அடுத்து, அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3uhf30hw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

எதிர்ப்பு

அந்த சமயம் மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் அனாவசியமாக மறுபிறவி, பாவம், புண்ணியம் என்று எல்லாம் எதற்காக பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

பாவம்

இதனால், கோபமடைந்த மகா விஷ்ணு, 'நீங்கள் சொல்லித் தராததைத் தான் நான் சொல்லித் தருகிறேன். அதுக்கு நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டும். வீணாக, வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்' எனக் கூறியுள்ளார். அப்போது, 'முற்பிறவியில் செய்த பாவ செயல்களின் பலனாகவே, இந்த ஜென்மம் கிடைத்துள்ளதாக' மகா விஷ்ணு கூறியுள்ளார்.

சும்மா விடமாட்டேன்

அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சை வெடித்தது. ஆன்மிக சொற்பொழிவாளர்களை அரசுப் பள்ளிகளுக்கு எதற்காக அனுமதிக்கிறீர்கள்? என்றெல்லாம் பள்ளிக்கல்வித்துறை மீது கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், 'என் துறையின் கீழ் இருக்கும் ஆசிரியர்களை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். இவர் மீது ஆசிரியர் புகார் அளித்தால், அதற்கு உறுதுணையாக இருப்போம். பிற்போக்கு பேச்சை தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது,' என்று அமைச்சர் மகேஸ் தெரிவித்திருந்தார்.

பணியிட மாற்றம்

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

புகார்

அதேவேளையில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை போலீஸில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மேலும், திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் மகா விஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மகா விஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Moorthy
செப் 10, 2024 15:56

அணைத்து மீடியாக்களும் தெரிந்து உண்மை - கூறவேண்டும் அவர் சொன்னது திரு குரல் விளக்கம். இதற்கே இந்த நிலைமை என்றால் -


shreya
செப் 08, 2024 16:26

மாற்று திறனாளிகளை 6 மாதம் முன்பு வன்முறையாக கைது செய்த இந்த திமு க அரசின் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இவங்களுக்கு நிஜமாகவே மாற்று திறனாளிகள் மீது கரிசனம் இருந்தால் இப்படி கைது செய்திருக்க மாட்டார்கள்


sankaran
செப் 07, 2024 21:16

உண்மையாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும்.... தமிழ் நாட்டில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் திராவிட ஆட்சி... எதை பொது இடத்தில் பேச வேண்டும் என்று தெரியாதா ?..


Venkataraman
செப் 07, 2024 14:43

அதெல்லாம் இருக்கட்டும். சனாதன தர்மத்தை காலரா டெங்குவை போல ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொன்ன உதயநிதியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?


தம்பிராசு
செப் 07, 2024 17:15

எது?


shreya
செப் 08, 2024 16:28

அவங்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம். மத்தவங்க யாருக்கும் இல்ல.


p.s.mahadevan
செப் 07, 2024 13:25

அவர் பேசியதில தவறு இருந்தால், அவர் கூறிய எடுத்துக்காட்டுக்களில் தவறு இருந்தால் நிச்சயம் கேட்கவேண்டும். காழ்ப்புணர்ச்சி கூடாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 07, 2024 11:48

அறிவியல் உலகம் கல்வி அறிவு உழைப்புக்கு ஊதியம் உயர்வு உண்மையிலேயே இங்கு எங்கு உள்ளது. சாதி தான் முக்கியம். சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பணி உயர்வு எல்லாம்.


AMLA ASOKAN
செப் 06, 2024 23:40

Paramporul Foundation என்ற அமைப்பை துவக்கி வாழ்வியல் குறித்து பேசும் இவருக்கும் ஆன்மிகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை . இவருக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமமுமில்லை . இறைவன் உள்ளான் என்பதோடு சரி . சாமி பக்தனும் இல்லை . கடவுள் வழிபாடு என்ற பேச்சே இல்லை . உன்னால் முடியும் என்ற கொள்கை உடையவர் . ஆனால் மதியால் விதியை வெல்ல முடியாது என்கிறார். ஆசிரமம் ரெடி - மஹான் அந்தஸ்து - வெளிநாட்டு பயணம் - வெகுளி ஜனங்கள் - பணம் கொலிக்கும் நேரத்தில் பாழாய்ப்போன இந்த பள்ளியில் பேசினதால் தன் முன்பிறவி செயலாலோ , விதியாலோ இந்த இளம் வயது சாமியார் கதை கந்தலாகி விட்டது . இத்தகு சாமியார்கள் உருவாவதை இந்துக்கள் தடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .


Sathyanarayanan Sathyasekaren
செப் 07, 2024 04:34

அப்படி இவர் என்ன தவறாக பேசிவிட்டார்? இந்த தலைமுறை குழந்தைகளுக்கு நமது தத்துவங்கள் எப்படி தெரியும், எப்படி கற்றுக்கொள்வார்கள்? கிருத்துவ பள்ளிகளில் மூளை சலவை செய்வதை தடுக்க முடியமா?


தமிழன்
செப் 06, 2024 22:37

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் குழப்பத்தை உண்டாக்க இவர்களே பிரச்சனையை உருவாக்கி, பெரிது படுத்தி மக்களை திசை திருப்புகிறார்கள் என்பது மக்களுக்கு புரியாமலா இருக்கும்.. திமுக இல்லாத தமிழகம் வரும் வரை மக்களுக்கு நிம்மதி இல்லை. திமுகவிடம் இருந்து தமிழகம் சுதந்திரம் பெறும் காலம் எப்போ வருமோ..


தமிழன்
செப் 06, 2024 22:19

பணியிட மாற்றம் செய்தால் எல்லாம் சரியாகி விடுமா? அல்லது குற்றங்கள் மறைக்கப்படுமா? இதுக்கு தான் அறிவு முதிர்ச்சியும், ஞானமும் உள்ளவர்கள் தான் உயர் பதவிக்கு வர வேண்டும் என்று சொல்லுவார்கள் விளையாட்டு பிள்ளைகளிடம் விலை மதிப்புள்ள பொருட்களை கொடுத்தால் அதை பொம்மை என நினைத்து உடைத்து இடும் இல்லையா ?


vbs manian
செப் 06, 2024 22:10

திருவள்ளுவர் திருமூலர் அருணகிரி எல்லோரும் இம்மை மறுமை பற்றி பாடியுள்ளனர். எல்லாம் மூட நம்பிக்கையா. பாட திட்டத்தில் நீக்கி விடுவார்களோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை