உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேய் போல பரவுகிறது மதமாற்றம்: பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்

பேய் போல பரவுகிறது மதமாற்றம்: பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்

விருத்தாசலம் : ''இந்தியாவில் மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது,'' என தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறினார்.கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வீரத்துறவி ராமகோபாலனால் ஒரு சிலையை வைத்து துவங்கப்பட்டது. இன்று ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுதும் ஒன்றரை லட்சம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் 10 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.ஜாதி, மதம் கடந்து ஒற்றுமைக்காக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி மட்டுமே. ஹிந்துக்கள், தமிழர்கள் கூடுகிறோம் என்பதற்காக இதை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. கடந்த 2018ல் ஒரு அரசாணை போட்டனர். அதை பின்பற்றினால் விநாயகரே வந்தாலும், அவருக்கு சிலை வைக்க முடியாது.புதிதாக பிள்ளையார் சிலை வைக்க முடியாது என தமிழக காவல்துறை கூறுகிறது. ஆனால், ஆண்டுதோறும் 50,000 விநாயகர் சிலைகள் அதிகரித்து தான் வருகின்றன. சட்டத்துக்கு மேல் யாரும் கிடையாது.விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கேட்பவர்களை காவல்துறை துன்புறுத்துகிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் விற்போரை விட்டு விடுகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என காவல்துறை கூறுகிறது. அது முழுப் பொய். மதமாற்றம் பேய் போல பரவி கொண்டிருக்கிறது. மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிராக பேசவில்லை. ஆனால் மதமாற்றத்திற்கு எதிராக பேசுகிறோம்.ஹிந்துக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், சொத்து சேர்க்க முடியாது என நினைக்கின்றனர். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நிறைய மக்கள் செல்வங்களை பெற்று, அவர்களை இந்த தேசத்திற்காக அர்ப்பணியுங்கள்.இவ்வாறு அஸ்வத்தாமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

MADHAVAN
செப் 13, 2024 10:32

சத்தியநாராயணன் போன்ற ... இங்க வந்து கருது போடலாமா ?


venkat venkatesh
செப் 12, 2024 23:13

he has given 100% correct statement


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 12, 2024 21:47

டெபாசிட் வாங்க வக்கில்லாத வெட்டி பேச்சுக்கு குறைவில்லை


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 20:42

செப்டம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை, ஆக்ராவில் உள்ள எஸ்என் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவர் டாக்டர் தில்ஷாத் ஹுசைன், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 10ஆம் தேதி இரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 6 ஆம் தேதி சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதி, குழந்தைகள் நலப் பிரிவு பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தன்று, தில்ஷாத் சிறுமியை சிகிச்சை என்ற போர்வையில் தனது அறைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் அவளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளுக்குள் கைகளை வைத்ததாகவும், அவரது அந்தரங்க உறுப்புகளை தகாத முறையில் தொட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண் அலறியடித்துக்கொண்டு அவனது அறையை விட்டு வெளியே ஓடி வெளியே காத்திருந்த தன் தாயை ஒட்டிக்கொண்டாள். சிறுமி பரிதாபமாக இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் ஜூனியர் டாக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசாந்த் குப்தா விரைந்து நடவடிக்கை எடுத்து தில்ஷாத்தை சஸ்பெண்ட் செய்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. MM கேட் காவல் நிலையத்தில் தவறான நடத்தைக்காக POCSO சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். முதலில் இந்த வழக்கை நசுக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் வருவதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தில்ஷாத் ஹுசைன் அங்கிருந்து சென்றுவிட்டார். தில்ஷாத் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த முழு நேரமும் குடும்பத்திற்கு ஆதரவாக நின்ற இந்து அமைப்பின் உதவியுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தில்ஷாத் பரேலியில் வசிப்பவர் என்றும், கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.


vbs manian
செப் 12, 2024 18:22

அதான் சம்பந்தபட்டவர் ஒத்துக்கொண்டு விட்டாரே.


MADHAVAN
செப் 12, 2024 13:41

இவன் இப்போதான் நீதிமன்றத்தில் மண்டி போட்டு மன்னிப்பு கேட்டுட்டு வந்தான்


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 20:58

தொழுகை நடத்திவிட்டு நீயி ஹிந்துக்களை போட்டுத்தள்ளுவது இல்லையா ..... அதைப்போலத்தான் .......


MADHAVAN
செப் 12, 2024 13:28

இப்போ பெங்களூருல நாகமங்கலம் என்ற இடத்தில விநாயகர் ஊர்வலம் நடந்தபோது முஸ்லீம் தெருவில் விநாயகர் போகும்போது இந்து முஸ்லீம் சண்டை நடக்குது, 144 போட்டிருக்கு,


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:45

மாதவன் உன்னை போன்ற சொரணை அற்ற ஹிந்துக்கள் இருப்பதால் தான் அப்படி நடக்கிறது. ஏன் அந்த தெரு இந்தியாவில் தானே இருக்கிறது? கள் எடுத்து அடிக்கும் பயங்கரவாத மதத்தினரை தட்டி கேட்க உனக்கு தயிரியம் இல்லையா? நாம் எங்கே பாகிஸ்தானில இருக்கிறோம். ?


MADHAVAN
செப் 12, 2024 12:01

விநாயகர் சிலை வேண்டாம் என்று சொல்லவில்லை, நீங்க அந்த சிலையை வைத்துக்கொண்டு பண்ணும் அராஜகம் தாங்கமுடியாமத்தான் சொல்றாங்க


Rajathi Rajan
செப் 12, 2024 11:17

இவாளுக்கு எத்தனை பிள்ளைகள்?


mei
செப் 12, 2024 10:47

உண்மை, பள்ளிவாசல்களில் தினசரி ஒதப்படுவதே ஜனத்தொகையை பெருக்கிடுங்க என்பது தான்


kantharvan
செப் 12, 2024 13:38

பொய் என்று பெயரை வைத்து கொள்ளுங்கள் அதான் சரி.


முக்கிய வீடியோ