உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பிரமுகருக்கு ஐகோர்ட் முன்ஜாமின்

அ.தி.மு.க., பிரமுகருக்கு ஐகோர்ட் முன்ஜாமின்

சென்னை:தேர்தல் நடத்தை விதியை மீறியதாக பதிவான வழக்கில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன், அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய, உதகையில் உள்ள காபி ஹவுஸ் பகுதியில் இருந்து, ஒரே நேரத்தில் இரு கட்சியினரும் ஊர்வலமாக செல்ல கூடினர். அப்போது, பா.ஜ., தொண்டர்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நடத்தை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது; பட்டாசு வெடித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், உதகை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அ.தி.மு.க., மாவட்ட செயலர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட, 20 அ.தி.மு.க.,வினருக்கு எதிராக நான்கு பிரிவுகளின் கீழும், மாவட்ட பா.ஜ., தலைவர் மோகன்ராஜுக்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகளில் முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் கப்பச்சி வினோத் மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசார ணைக்கு வந்தது. கப்பச்சி வினோத்துக்கு முன் ஜாமின் வழங்கியும், விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராகும்படியும் நிபந்தனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை