UPDATED : ஆக 10, 2024 04:26 AM | ADDED : ஆக 10, 2024 12:57 AM
சென்னை:மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீங்கள் வெளிநாடுகளில் பணிபுரிய வேலைதேடும் நபராக இருந்தால், உங்களை ஏதேனும் வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பு கொண்டால், அவர்கள் பதிவு செய்யப்பட்ட முகவர்களா, போலியான முகவர்களா என்பதை, https://emigrate.gov.in/#/ என்ற லிங்க் -- இன் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்https://emigrate.gov.in/#/ என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான ஆள்சேர்ப்பு முகவர் பட்டியலில் இருந்தும், போலியான மற்றும் தடைசெய்யப்பட்ட முகவர்களை அடையாளம் கண்டறியலாம் வேலை வாய்ப்புக்காக சுற்றுலா விசாவில், வெளிநாடுகளுக்கு செல்ல ஒரு போதும் ஒப்புதல் அளிக்காதீர்கள். நீங்கள் அங்கு சென்று, வேலையை துவக்கிய பின், உங்களுக்கு வேலை விசாவை பெற்றுத்தருவதாக, இந்த போலி முகவர்கள் உங்களுக்கு உறுதிஅளிக்கலாம். அங்கு பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்உங்களை தொடர்பு கொள்ளும் முகவர்கள் மோசடி நபர்களாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தால், அவர்களின் மொபைல் போன் எண்ணை, https://cybersafe.gov.in/ என்ற சைபர் பாதுகாப்பு போர்டலில் சரிபார்க்கவும். அந்த எண்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ளலாம்அவர்கள் மீது சந்தேகம் வலுத்தால், https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். மேலும், சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பணத்தை இழந்து இருந்தால், 24 மணி நேரத்திற்குள், கட்டணமில்லா, 1930 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.