உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழங்கோவிலை அழிப்பது வரலாற்று துரோகம்

பழங்கோவிலை அழிப்பது வரலாற்று துரோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''பழமையான கோவில்களை அழிப்பது, வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம்,'' என, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலய பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 50,000க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரை, 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட கோவில்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அவை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள, கவனிக்கப்படாத கோவில்களாகவும், அழியும் நிலையிலும் உள்ளன. சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்துாரில், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. அங்கு சமீபத்தில் ஆய்வு செய்தோம். அங்கு பழமையான எந்த அமைப்பும் இல்லை. கருவறை முதல் எல்லாவற்றையும் தற்கால பாணியில் புதுப்பித்துள்ளனர். இதுபோல், பல கோவில்களின் பழமை அழிக்கப்பட்டு விட்டது. இது, வரலாற்றுக்கு செய்யும் துரோகம்.கோவில்கள், பழைய வரலாற்றை தாங்கி நிற்கும் சாட்சிகள். அவற்றில் உள்ள கல், மண், சிலை, கோபுரம், பிரகாரம் அனைத்தும் வரலாற்று தடயங்கள். அவற்றை அழித்து புதுப்பிப்பது, நம் வரலாற்றை நாமே அழிப்பதற்கு சமம். வரலாறு இல்லாதவர்கள் தான் புதிதாக கட்டுமானங்களை எழுப்புவர். நாம் நீண்ட பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கொண்டவர்கள் என்பதை வெளிநாட்டினருக்கும், அடுத்த தலைமுறைக்கும் சொல்ல வேண்டும்.அதற்கு, பழமையான கோவில்களை அதே நிலையில் பராமரித்து, பாதுகாக்க வேண்டும். அதற்கு முன், அவற்றில் உள்ள வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்தி, நுால்களாக்க வேண்டும். அதற்கான பணிகளை விரைவில் துவக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Tetra
ஜூன் 16, 2024 19:28

40க்கு 40 மக்களிடம் வாங்கியிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேள்வி கூடாது


adalarasan
ஜூன் 13, 2024 22:07

மக்கள்தான்,, இதை தடுத்துநிறுத்தி,,,aavana செய்யவேண்டும், தஞ்சாவூர் ஜில்லாவில் பல கிராமங்களில், கோவில்கள் பராமரிக்க படாமல்,azhinthum விட்டன.


ES
ஜூன் 13, 2024 12:54

Destruction of our temples needs to be stopped. we should protect our pride


Sampath Kumar
ஜூன் 13, 2024 11:40

ஒரு பிரயோசனம் இல்லை.... அதை ஏடுத்து செலவு செய்து பழமையை காப்பாற்றுங்க பார்க்கலாம்


Naga Subramanian
ஜூன் 13, 2024 11:29

வந்தே மாதரம் என்று சொல்லக் கூட தயங்க வேண்டியுள்ளது இப்பொழுது. சோழ நாடு என்பது போயி, திராவிட நாடு என்ற ஒரு அடிப்படையே இல்லாத பேச்சுக்கள் நிரம்பிவிட்டன.


ram
ஜூன் 13, 2024 11:21

ஸ்ரீபெரும்புதூரில் ஜெயித்த எம்பீ பெருமையாக நானே ஒரு 250 ஆண்டுகள் பழமையான கோவிலை பெருமையாக சொல்லிக்கொண்டு திரிகிறார்


Lion Drsekar
ஜூன் 13, 2024 10:23

கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் எதையுமே சொல்வதற்கு உரிமை இல்லை, என் வீட்டு கேட்டை காரில் வந்து உடைத்து என்று விட்டார்கள், புகார் கொடுத்ததும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, அமைதியாக இருப்பதுவே சாலச்சிறந்தது . உரிமை என்பது அவர்களுக்கு மட்டுமே, வந்தே மாதரம்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 13, 2024 09:07

இப்படியே புலம்பிகிட்டு இருங்க, சர்வாதிகாரிக்கு எங்களை போன்ற வெளிநாட்டு மதத்தினர் தான் முக்கியம்


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 08:23

சாண்ட் ப்ளாஸ்டிங் முறையில் முன்னர் பல கோவில் சிற்பங்களை நாசம் செய்து விட்டார்கள். அறநிலையத்துறைக்கு கோவில்களை பராமரிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை.


Bhaskaran
ஜூன் 13, 2024 08:03

விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அர்த்தமண்டபம் மகாமண்டபம் போன்றவை இடிக்கப்பட்டு சாதாரண அம்மன் கோவிலாகவே மாற்றி கட்டப்பட்டது ஆகும் விதிமுறைகள் மீறல்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி