உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீயணைப்புத்துறை விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு இடமாறுதல் முன்னுரிமை டி.ஜி.பி., ஆபாஷ்குமார் உறுதி

தீயணைப்புத்துறை விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு இடமாறுதல் முன்னுரிமை டி.ஜி.பி., ஆபாஷ்குமார் உறுதி

மதுரை: ''தீயணைப்புத்துறை விளையாட்டுகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இடமாறுதலில் முன்னுரிமை அளிக்கப்படும். பணியில் சிறு தவறு செய்த வீரர்கள் மீது சர்வீஸ் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என அத்துறை டி.ஜி.பி., ஆபாஷ்குமார் பேசினார்.மதுரையில் 3 நாட்களாக தீயணைப்புத்துறை வீரர்களுக்கான மாநில விளையாட்டு போட்டி நடந்தது. தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளோடு தீயணைப்பு கருவிகளை கையாளுதல், நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டன. இதில் தீயணைப்பு கருவிகளை கையாளும் போட்டியில் தென்மண்டல அணி வெற்றி பெற்றது. தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வடக்கு மண்டல அணி வென்றது. தென்மண்டலம் 2வது இடம், மத்திய மண்டலம் 3வது இடத்தை பெற்றது.வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பையை வழங்கி ஆபாஷ்குமார் பேசுகையில், ''வெற்றி பெற்ற வீரர்களுக்கு இடமாறுதலின்போது விரும்பிய இடங்களில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படும். பணியின்போது சிறு தவறு செய்த வீரர்கள் அவர்கள் சர்வீஸ் பாதிக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இத்துறையில் ஆட்கள் குறைவாக இருந்தாலும் போலீசிற்கு ஈடாக பணியாற்றி வருகிறீர்கள். இனி நடக்கும் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நானும் ஒரு சிறப்பு கோப்பையை ஸ்பான்சர் செய்வேன்'' என்றார்.நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் ராஜேஷ்கண்ணன், மதுரை அலுவலர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ