உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் விரைவில் டிஜிட்டல் பேமென்ட்

டாஸ்மாக்கில் விரைவில் டிஜிட்டல் பேமென்ட்

ஈரோடு: ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று துவக்கி வைத்தார்.

நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, 12,000 பில்லிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் இந்த மெஷின் வைக்கப்பட்டு விட்டால், கூடுதல் விலைக்கு விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது. 'டிஜிட்டல் பேமன்ட்' திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Indhuindian
செப் 04, 2024 05:42

சபாஷ் டிஜிட்டல் தமிஷ்நாடு. இதை தொடர்ந்து ஆன்லைனிலும் விற்க வேண்டும் குடி மகன்கள் சாராய கடைக்கு போகும் அவலம் குறையும் வீடு தேடி வரும் சாராயம்


Kasimani Baskaran
செப் 04, 2024 05:30

அடக்க விலைக்கு ஒரு முறை ஸ்கேன் செய்ய வேண்டும். அடுத்தது கூடுதல் தொகை நேரடியாக போகவேண்டியவர்களுக்கு சென்று விடும்.


Duruvesan
செப் 04, 2024 04:40

விடியலு சார் 870 கோடிக்கு அமெரிக்காவில் ஒப்பந்தம், தாஸ்மாக்ல 6 நாள் சேல்ஸ் அது, இதுக்கு இவரு அமெரிக்கா போனாரு ?


Mani . V
செப் 04, 2024 04:37

நாங்கள் எதில் முன்னோடியாக இருக்கிறோமே இல்லையோ. வருங்கால சமுதாயத்தை சீரழிப்பதில் நாங்கள்தான் முதலிடம், முன்னோடி. எந்தக் கொம்பனும் குறை சொல்லவே முடியாது.


முக்கிய வீடியோ