உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் குழந்தைகள் விளையாடும் சுடுமண்ணால் ஆன கிண்ணம், பெரிய மீன் முதுகெலும்பில் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ பொருள் கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை என 1750 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தோண்டப்பட்ட 9வது குழியில் சுடுமண்ணால் ஆன குழந்தைகள் விளையாடும் சிறிய கிண்ணம், பெரிய மீன்களின் முதுகெலும்பில் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ விளையாட்டுப் பொருள் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில்,முன்னோர்கள் வேலை பளுவிற்கு இடையே சதுரங்கம் ஆடுதல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்று கிடைத்துள்ளது. அதேபோல் குழந்தைகள் விளையாடுவதற்கும் சுடுமண்ணால் பொருட்கள், பெரிய மீன்களின் முதுகெலும்பில் நட்சத்திர வடிவிலான பொருளும் குழந்தைகள் விளையாடுவதற்காக செய்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ