உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதி மறுத்து போலீஸ் கெடுபிடி தி.மு.க., மீது கூட்டணி கட்சியினர் கடுப்பு

அனுமதி மறுத்து போலீஸ் கெடுபிடி தி.மு.க., மீது கூட்டணி கட்சியினர் கடுப்பு

கொடி கம்பம் நடுவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி தராததால், தி.மு.க., மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிருப்தி அடைந்துள்ளன.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை ஒட்டி, கிராமம் தோறும் கொடி கம்பம் நடும் பணிகளை, அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம், காமேஸ்வரத்தில், 62 உயர கொடி உயர கம்பத்தை நட்டு வைத்தனர். இதை அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மற்றும் கீழையூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த போலீசார், அனுமதி இன்றி கம்பம் நட்டு வைத்ததாக கூறி, இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர். அக்கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, அக்கட்சி எம்.எல்.ஏ., ஆளுர் ஷாநவாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொடி கம்பம் நட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் பூரண மதுவிலக்கு மாநாடு, அக்டோபர் 2ல் வி.சி., கட்சி சார்பில் நடக்கிறது. அதில் நிறைவேற்றப்பட வேண்டிய அரசியல் தீர்மானங்கள் குறித்து, மாநில நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த கொடி கம்பம் விவகாரம் குறித்தும், அனுமதி தராத அரசு குறித்தும் காரசாரமாக பேசினர். போலீசாரின் கெடுபிடியை திருமாவளவனிடம் விவரித்தனர். இந்த விவகாரத்தில், தி.மு.க., மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணனிடம், போலீஸ் அதிகாரிகள், அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்றும், அங்கிருந்து 50 மீட்டர் தள்ளி நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; தள்ளுமுள்ளு சம்பவமும் அரங்கேறியது. கடைசி வரை, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்ககவில்லை. பெண் தொண்டர்கள் சிலர், பிடித்து தள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரியும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் கே.பாலகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி